பிரியங்கா போகட்டு
பிரியங்கா போகட்டு (Priyanka Phogat) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீராங்கனையாவார். 1993 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். தனிப்பட்ட வாழ்க்கைபொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வினேசு போகட்டின் சகோதரியாகவும், துரோணாச்சார்யா விருது வென்ற மகாவீர் போகட்டின் மருமகளாகவும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான கீதா மற்றும் பபிதாவின் உறவினராகவும் பிரியங்கா போகட்டு அறியப்படுகிறார். தொழில்2015 ஆம் ஆண்டில் புரோ மல்யுத்தப் போட்டியின் பஞ்சாப் உரிமையுடன் ₹ ஏழு லட்சம் ஒப்பந்தத்தை பிரியங்கா போகட்டு பெற்றார். [1] பிப்ரவரி 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாங்காக்கில் நடந்த ஆசிய மல்யுத்த வெற்றியாளர் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கப் போட்டியில் மங்கோலியாவின் தவாசுகியின் ஒட்கோன்ட்செட்செக்கிடம் பிரியங்கா தோற்றார். [2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia