பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் (French Revolutionary Wars) என்பன 1792 முதல் 1802 வரை பிரெஞ்சுப் புரட்சியாளர் அரசுக்கும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நடந்த தொடர் போர்களைக் குறிப்பதாகும். பிரெஞ்சுப் புரட்சியின் உணர்ச்சி வேகத்திற்கும் படைத்துறை புதுமைகளுக்கும் இச்சண்டைகள் சான்று பகர்ந்தன. பிரெஞ்சுப் புரட்சிகர படைகள் பல எதிர் கூட்டணிகளை வெற்றி கண்டதோடு பிரெஞ்சு ஆளுமையை தாழ் நாடுகள், இத்தாலி மற்றும் ரைன்லாந்து பகுதிகளுக்கு விரிவாக்கினர். பெரும்பாலான மக்கள் கூட்டமாக இணைந்த (லெவீ ஆன் மாஸ் என பிரான்சியத்தில் குறிப்பிடப்படும்) இந்தப் போர்களில் பல்லாயிரக் கணக்கான படைவீரர்கள் பங்கேற்றனர். பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் வழமையாக இரண்டு காலகட்டங்களாக, முதல் கூட்டணி (1792–1797) மற்றும் இரண்டாம் கூட்டணி (1798–1801), பிரிக்கப்படுகிறது. இந்த இரு காலகட்டங்களிலும் பிரான்சு பெரிய பிரித்தானியாவுடன் தொடர்ந்து 1793 முதல் 1802 வரை போரிட்ட வண்ணம் இருந்தது. 1802இல் அமீயன்சு உடன்பாட்டிற்குப் பிறகு அமைதி திரும்பியது. இருப்பினும் விரைவாகவே நெப்போலியப் போர்கள் துவங்கின. பொதுவாக அமீயன்சு உடன்பாடு பிரெஞ்சுப் புரட்சிப் போர்களின் முடிவைக் குறிப்பதாக கருதப்பட்டாலும் 1802க்கு முன்னரும் பின்னரும் நடந்த நிகழ்வுகள் நெப்போலியப் போர்களுக்கு காரணமாக அமைந்திருந்தன. முதல் கூட்டணிப் போர்![]() 1792 - 1797 காலகட்டத்தில் முடியாட்சியை ஒழித்த புரட்சிகர பிரான்சை கட்டுப்படுத்த ஐரோப்பாவின் மற்ற பல முடியாட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய முதல் முயற்சியே முதல் கூட்டணிப் போர் என அழைக்கப்படுகிறது. 1792ஆம் ஆண்டில் ஏப்ரல் 20இல் ஆத்திரியாவின் அப்சுபர்க் முடியாட்சியுடன் பிரான்சு போரிடுவதாக அறிவித்தது. சில வாரங்களிலேயே பிரசிய இராச்சியம் ஆத்திரியர்களின் பக்கம் சேர்ந்தது. இந்த இரு நாடுகளும் பிரான்சின் நிலம்,கடல் பகுதிகளை ஆக்கிரமித்தன; பெரிய பிரித்தானிய இராச்சியம் பிரான்சின் மாநிலங்களில் எழுந்த எதிர்ப்புகளுகு துணை புரிந்தது. மேலும் டூலோன் நகரை சிறை பிடித்தது. பிரான்சு 1793இல் நீர்வென்டன் சமரிலும் வென்டீ உள்நாட்டுக் கலகத்திலும் தோல்வியுற்றது. இதனால் பொங்கி எழுந்த பிரான்சு ஏப்ரல் 6, 1793இல் பொதுப் பாதுகாப்பு குழு ஏற்படுத்தியதுடன் லெவி ஆன் மாஸ் என அறியப்பட்ட பேரெழுச்சி மூலம் 18 வயது முதல் 25 வரை இருந்த அனைத்து இளைஞர்களையும் படைவீரர்களாக சேர்த்துக் கொண்டது. இந்த இளைஞர் படை எதிர் தாக்குதல்கள் நடத்தி ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றியதுடன் இல்லாது பிரான்சின் எல்லை கடந்தும் நிலப்பகுதிகளை வென்றனர். மே 1795இல் பேத்தாவியக் குடியரசை தங்களது வெளிமாநிலமாக நிறுவினர். முதல் பேசல் உடன்பாட்டின்படி பிரசிய ரைன்லாந்து பகுதியை கைப்பற்றினர். கேம்போ ஃபோர்மினோ உடன்பாட்டின்படி புனித உரோமன் பேரரசு ஆத்திரிய நெதர்லாந்துப் பகுதியை விட்டுக் கொடுத்தது. வடக்கு இத்தாலியில் பல பிரான்சிய வெளிமாநிலக் குடியரசுகள் நிறுவப்பட்டன. எசுப்பானியா பிரான்சுடன் தனி அமைதி உடன்பாடு (இரண்டாம் பேசல் உடன்பாடு) கண்டது. 1795இல் பிரெஞ்சு டைரெக்டரி செருமனியின் பகுதிகளையும் வடக்கு இத்தாலியையும் கைப்பற்றத் திட்டமிட்டுச் செயலாற்றியது. ஆல்ப்சு மலைகளின் வடக்கே ஆத்திரியாவின் ஆர்ச்டியூக் சார்லசு 1796இல் சிவற்றை மீட்டபோதும் நெப்போலியன் பொனபார்ட் சார்டீனியா மீதும் இத்தாலியின் போ ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஆத்திரியா மீதும் வெற்றி கண்டார். இவற்றைத் தொடர்ந்து லோபென் அமைதி உடன்பாடும் கேம்போ ஃபோர்மியோ உடன்பாடும் (அக்டோபர் 1797) ஏற்பட்டன. இவ்வாறு பிரான்சிற்கு எதிரான முதல் கூட்டணியில் பிரித்தானியாவைத் தவிர பிற நாடுகள் தோல்வியைத் தழுவின. இரண்டாம் கூட்டணிஇவற்றையும் காண்கமேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia