பிரேம்லீலா வித்தல்தாஸ் தாக்கர்சே

பிரேம்லீலா வித்தல்தாஸ் தாக்கர்சே (Premlila Vitaldas Thackersey) (1894-1977) ஒரு இந்திய எழுத்தாளர், காந்தியவாதியும் ஆவார்.[1][2] கல்வியாளரும், நன்கொடையாளருமான வித்தல்தாஸ் தாகர்சேவின் துணைவியாவார் இவர். 1925 ஆம் ஆண்டு தமது 31 ஆவது வயதில் கணவனை இழந்தவர். தொடர்ந்து கல்விப் பணியிலும் பொதுப் பணியிலும் குறிப்பாக பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் கஸ்தூரிபா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தலைவராகவும் (1952-1972) பம்பாய் பெண்கள் பல்கலைக் கழகத்தின் (SNDT) முதல் துணை வேந்தராகவும் பதவி வகித்தவர்[3].

இவருடைய கல்விப் பணிக்காக இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமக்களுக்கான விருதான பத்ம விபூசணை இந்திய அரசு 1975 ஆம் ஆண்டு வழங்கிப் பெருமை சேர்த்தது[4]

  1. Gouri Srivastava (2006). Women Role Models: Some Eminent Women of Contemporary India. Concept Publishing Company. pp. 22–. ISBN 978-81-8069-336-6.
  2. Nagendra Kr Singh (2001). Encyclopaedia of women biography: India, Pakistan, Bangladesh. A.P.H. Pub. Corp. p. 385. ISBN 978-81-7648-264-6.
  3. S. K. Gupta (1994). Career Education in India: The Institutes of Higher Learning. Mittal Publications. p. 63. ISBN 978-81-7099-540-1.
  4. "Padma Awards Directory (1954–2007)" (PDF). Ministry of Home Affairs. 2007-05-30. Archived from the original (PDF) on 2009-04-10. Retrieved 2018-11-28.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya