பிறந்தநாள் வாழ்த்து அட்டை![]() பிறந்தநாள் வாழ்த்து அட்டை (Birthday card) என்பது ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வழங்கப்படும் அல்லது அனுப்பப்படும் வாழ்த்து அட்டை ஆகும். பிறந்தநாள் கேக்கைப் போலவே, பிறந்தநாள் வாழ்த்து அட்டையும் மரபுகள் பண்பாடுகளைப் பொறுத்து மாறுபடும் என்றாலும் பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளின் தோற்றம் குறித்து தெளிவாக தெரியவில்லை. [1] கணினிமயமாக்களின் வருகையும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் அறிமுகமும் பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை அனுப்ப மின்னணு பிறந்தநாள் அட்டைகள் அல்லது முகநூல் இடுகைகளைப் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்தது. பொருளும் ஆய்வும்![]() செலிபிரேட்டிங் லைப் கஸ்டம்ஸ் அரௌண்ட் தி வேல்ட் என்ற கலைக்களஞ்சியத்தில் எழுதப்பட்டுள்ளபடி, பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் என்பவை "அனுப்பப்படும் மிகவும் பிரபலமான வாழ்த்து அட்டைகள் மற்றும் வாங்கப்படும் அனைத்து வாழ்த்து அட்டைகளிலும் இது 60 விழுக்காடு ஆகும்" (வில்லியம்ஸ்). [1] பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளானது அமெரிக்க பண்பாடு உட்பட பல்வேறு பண்பாடுகளில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. [2] இந்த அட்டைகள் தனிப்பட்ட மற்றும் பண்பாட்டு நிலையில் வெவ்வேறு பொருட்களை வழங்குகின்றன. [3] பிறந்தநாள் அட்டைகளானது "வயதானவர்களைப் பற்றிய குமுகாய மனப்பான்மை, அன்பின் தொடர்பு பற்றிய சமூக மனப்பான்மையின் குறிகாட்டிகளாக" இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறன. [2] எடுத்துக்காட்டாக, 1981 இல் 150 பிறந்தநாள் அட்டைகள் குறித்து மேற்கொள்ளபட்ட வரு பகுப்பாய்வு ஆய்வில், முதுமைப் பற்றிய எதிர்மறையான பார்வைகளை நகைச்சுவையாக சித்தரித்தது கண்டறியப்பட்டது. [4] இணையத்தில் அனுப்பப்படும் வாழ்த்து அட்டைகள் பற்றிய 2017 ஆய்விலும் இதே போன்ற சித்தரிப்புகள் கண்டறியப்பட்டன. [3] அமெரிக்காவில் 21 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அதிக ஆபத்துள்ள குடிப்பழக்கத்தைத் தடுக்கும் முயற்சியில், பல பொது சுகாதார ஆய்வுகள் குடிப்பழக்கத்தை தடுக்க பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளைப் பயன்படுத்தின. 2009 இல் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், "குடிப்பழக்கம் அல்லது அதன் விளைவுகளைத் தடுப்பதில் பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளின் இத்தகைய முயற்சிகள் வெற்றிகரமாக இல்லை என்பதைக் குறிக்கிறது" என்றன. [5] வரலாறுபண்டைய எகிப்தியர்களும் பண்டைய கிரேக்கர்களும் குறிப்பிட்ட சில நாட்களை குறிப்பிட்ட கடவுள்களின் பிறந்தநாளாகக் கொண்டாடியதற்கான சான்றுகள் உள்ளன மேலும் ஆதியாகமம் புத்தகத்தில் ஒரு பார்வோனின் பிறந்தநாள் விழா பற்றிய விளக்கம் உள்ளது. ஆனால் சாதாரண மனிதர்களின் பிறப்பைக் கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கியவர்கள் உரோமானியர்கள்தான். வடக்கு இங்கிலாந்தின் விண்டோலாண்டாவில் காணப்படும் ஹட்ரியனின் சுவரில் கிடைத்த மரப் பலகையில், ஒரு கோட்டைத் தளபதியின் மனைவியான கிளாடியா செவெராவால் அனுப்பபட்ட அழைப்பிதழ் காணப்படுகிறது. அவர் தன் நண்பரை அதன் வழியாக பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்துள்ளார். மேலும் அதுவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பிறந்தநாள் அட்டையின் ஆரம்ப வடிவமாகக் கருதப்படுகின்றது. இன்று நம் பயன்பாட்டில் உள்ள, பெருமளவில் தயாரிக்கப்படும் பிறந்தநாள் வாழ்த்து அட்டை, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டனில், முதல் கிறித்துமஸ் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே தயாரிக்கபட்டன. [6] குறிப்பிடத்தக்க அட்டைகள்குறிப்பிடத்தக்க பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளில் பின்வருவன உள்ளன:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia