புனித பேதுரு சதுக்கம்![]() புனித பேதுரு சதுக்கம் (இத்தாலியம்: Piazza San Pietro, ஒலிப்பு [ˌpi̯aʦa san ˈpi̯ɛːtɾo]) என்பது வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு பேராலயத்தின் எதிரே அமைந்துள்ள சதுக்கம் ஆகும். நீரோவின் தூண்இதன் நடுவில் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 25.5மீட்டர் உயரமுள்ள தூண் உள்ளது. நீரோவின் வட்டரங்கில் (Circus of Nero) இத் தூணின் முன்பு புனித பேதுரு சிலுவையில் அரையப்பட்டார். அதன் அருகே இருந்த அடிநிலக்கல்லரையில் அடக்கம் பெய்யப்பட்டர். முதலாம் கான்ஸ்டன்டைன் அதன் அருகே முதல் பேதுரு பேராலயத்தை அமைத்தார். இத்தூண் அக்கோவிலின் அருகே அமைந்திருந்தது. ![]() திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸின் ஆட்சியில் 1568ஆம் ஆண்டு அவரின் கட்டளைப்படி இத்தூண் புனித பேதுரு சதுக்கத்தின் நடுவில் பெயர்த்து வைக்கப்பட்டது. இதன் உச்சியில் இருந்த யூலியசு சீசரின் சாம்பலைக் கொண்டிருந்ததாக நம்பப்பட்ட கலசத்தை நீக்கிவிட்டு சிலுவை ஒன்றை வைக்க திருத்தந்தை ஆணையிட்டார்[1] அக்கலசம் பின்னாட்களில் திறக்கப்பட்டட போது அதில் ஏதும் இருக்கவில்லை. அது இப்போது உரோமை அருங்காட்சியகத்தில் உள்ளது. இத்தூண் இப்போது ஒரு சூரிய மணி காட்டியாகவும் பயன்படுகின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia