புரூஸ் லீ (2017 திரைப்படம்)
புரூஸ் லீ (Bruce Lee) என்பது அதிரடி- நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் எழுதி இயக்கினார். படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் ஜி. வி. பிரகாஷ் குமார் , கிரிதி கர்பந்தா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை கென்யா பிலிம்சு தயாரித்துள்ளது. படத்தயாரிப்பானது 2015 சூலையில் துவங்கி, 2017 மார்ச் 17 அன்று வெளியானது.[1] கதைநாயகன் ஜெமினி கணேசன் ( ஜி.வி.பிரகாஷ்) சிறுவயதில் இருந்தே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால், புரூஸ்லீ படம் பார்க்கும்போது மட்டும் ஆக்ரோஷமாக இருக்கிறார் என்றதும், அவரது அம்மா இவருக்கு புரூஸ்லி என்று பெயர் வைத்து அழைக்கிறார். புரூஸ்லி என்ற பெயர் வைத்ததும் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக சுற்றித்திரியும் ஜி.வி.பிரகாஷ் ஒரு ரவுடியிடம் மாட்டி அடிவாங்கிய பிறகு, எந்த பிரச்சினையிலும் மூக்கை நுழைக்காமல் அமைதியான வழியில் செல்கிறார். நாயகி சரோஜா தேவியும் (கீர்த்தி கர்பந்தா) ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். அதேநேரத்தில், பிரபல தாதாவாக வலம்வரும் முனீஸ்காந்த், அமைச்சரான மன்சூர் அலிகானைக் கொலை செய்கிறார். அதை ஜி.வி.பிரகாஷ், நாயகி சரோஜா தேவி, ஜி.வி.பிரகாஷின் நண்பரான அப்பாசும் (பாலசரவணன்) அவரது காதலி ஆகிய நால்வரும் பேரும் சேர்ந்து ஒளிப்படம் எடுத்துவிடுகின்றனர். அதை தொடர்ந்து புரூஸ் லீயும் அவரது காதலி சரோஜா தேவியும் எப்படியாவது இதை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறனர். இந்த ஒளிப்படத்தை வைத்து தாதா ராமதாசை போலீசில் சிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில், படமெடுத்த கேமராவைக் கைப்பற்ற முனிஸ்காந்த் சரோஜா தேவியையும் அவரது நண்பர் அப்பாசின் காதலியையும் சேர்த்துக் கடத்தி, கேமராவைக் கேட்டு மிரட்டுகின்றனர். முனீஸ்காந்திடம் இருந்து தங்கள் காதலியை மீட்க புரூஸ்லீ முனீசின் முன்னாள் மற்றும் இந்நாள் கூட்டாளிகளான மொட்டை ராசேந்திரன் மற்றும் சிலரைக் கூட்டணி சேர்த்து திட்டமிட்டு இந்த கும்பலை எப்படி சமாளித்து தன் காதலியைக் காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை. நடிகர்கள்
தயாரிப்புஇந்த படம் குறித்து முதலில் 2015 சூனில் அறிவிக்கப்பட்டது. கென்னன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த நகைச்சுவைத் திரைப்படத்தில் பிரசாந்த் பண்டிராஜுவின் இயக்கத்தில் நடிக்க ஜி. வி. பிரகாஷ் குமார் ஒப்புக்கொண்டார்.[2] படத்தின் பெயரை பாட்ஷா படத் தயாரிப்பளரிடம் இருந்து வாங்க இயலாத காரணத்தால், பாட்ஷா இல்லன்னா ஆண்டனி என்ற பெயர் 2015 சூலையில் புரூஸ் லீ என மாற்றப்பட்டது.[3][4] புரூஸ் லீ - தி ஃபைட்டர் (2015) தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் அந்தத் தெலுங்குப் படத்தை புரூஸ் லீ 2 என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டபோது 2016 அக்டோபரில் அவர்களுக்கும் ப்ரூஸ் லீ (2015) தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இடையில் ஒரு சிறிய சட்டரீதியான மோதல் ஏற்பட்டது. தமிழ் தயாரிப்பக் குழுவால், புரூஸ் லீ, தெலுங்குப் படத்தின் தமிழ் மொழிமாற்றப்படத்தின் வெளியீட்டை தடுக்க முடியவில்லை.[5] முதன்மைப் பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் சமந்தாவையும் பின்னர் திரிசாவையும் அணுகினர் ஆனால் அதன்பின்னர் தெலுங்கு புரூஸ் லீ படத்தில் நாயகியாக நடித்த கிரிதி கர்பந்தாவை தமிழில் அறிமுகப்படுத்தினர்.[6][7] 2015 அக்டோபரில், ஒளிப்படக் காட்சிகள் எடுக்கப்பட்டன. அதில் கிருதி மற்றும் பிரகாஷ் ஆகியோர் கல்லூரி மாணவர்களாக சித்தரிக்கப்பட்டு வெளிப்பட்டன.[8][9] அந்த மாதத்தின் பிற்பகுதியில் படத் தயாரிப்புத் தொடங்கியது, 2016 ஆண்டின் துவக்கத்தில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் இலக்கைக் கொண்டிருந்தனர்.[10] 2016 இன் துவக்கத்தில் படப்பிடிப்பு முடிந்த போதிலும், ஜி. வி. பிரகாஷ் குமாரின் மற்ற படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டியதால் பட வெளியீடு தாமதமானது.[11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia