புலம்பெயர் தமிழர்
புலம்பெயர் தமிழர் (Tamil diaspora) எனப்படுவோர் இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டிருந்து ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களைக் குறிக்கின்றது. குறிப்பிடத்தக்க புலம்பெயர் தமிழர் சனத்தொகை மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மத்திய கிழக்கு, ரீயூனியன், தென்னாபிரிக்கா, மொரிசியசு, சீசெல்சு, பிஜி, கயானா, மியான்மர், டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரான்சிய மேற்கிந்தியத் தீவுகள், ஐரோப்பா, அவுத்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர். தொடக்க கால குடியேற்றங்கள்ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறியோர் பிற இனத்தவருடன் கலந்துவிட்டனர். ஏனையோர் சம காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்தோர் அடையாளம் புராதன மரபுரிமையில், தமிழ் மொழியில், தமிழ் இலக்கியத்தில் வேரூன்றி, தற்போதும் உயிர்த்துடிப்பான கலாச்சாரத்தில் காணப்படுகின்றது. ஆரம்ப குடியேற்றக் குழுக்கள் பற்றி சிறப்பாக ஆவணப்படுத்தப்படவில்லை. இவற்றையும் பார்க்கவும்உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia