புவிசார் விலை நிர்ணயமுறை![]() சந்தைப்படுத்தலில் புவிசார் விலைமுறை (Geographical pricing) என்பது, சந்தையில் வாங்குபவரின் புவியியல் இருப்பிடத்தைப் பொறுத்து அடிப்படைப் பட்டியல் விலையை மாற்றுவதற்கான நடைமுறையாகும். இந்த விலை பல்வேறு இடங்களுக்குச் செல்லும் போக்குவரத்துச் செலவையும் உள்ளடக்கும். புவிசார் விலை அறுதியிடல் முறையில் பல வகைகள் உள்ளன:
தொழிற்சாலை அல்லது கிடங்கில் இருந்து சரக்கை எடுத்துச் செல்லக்கூடிய போக்குவரத்துச் செலவு வாங்குபவரின் பொறுப்பாகும். இம்முறையில் வாங்கப்பட்ட சரக்கு அதன் இருப்பிடத்திலிருந்து நகர்த்தப்பட்டவுடனேயே, வாங்கியவரே அதன் உரிமையாளராவார். போக்குவரத்து ஏற்பாடுகளை விற்பவரோ அல்லது வாங்குபவரோ மேற்கொள்ளலாம்.
இது அஞ்சல்வில்லை விலைமுறை (postage stamp pricing) என்றும் அழைக்கப்படுகிறது. இம்முறையில் அனைவருக்கும் ஒரேமாதிரியான விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இம்முறைப்படி, எடுத்துச்செல்ல வேண்டிய தொலைவு அதிகரிக்கும்போது விலையும் அதிகரிக்கும். தொழிற்சாலை அல்லது அல்லது கிடங்கினை மையமாகக் கொண்டு விலை மண்டலங்களைக் குறிக்கும் ஒருமையங்கொண்ட வட்டங்கள் வரைபடத்தில் வரைந்து கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு வட்டமும் ஒரு விலை மண்டலத்தின் எல்லையை வரையறுக்கும். இதில் வட்டங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக புவியியல், மக்கள் அடர்த்தி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, கப்பல் செலவு ஆகியவற்றை உள்ளடக்கும் ஒழுங்கற்ற வடிவ விலையெல்லைகளையும் வரைந்து கொள்ளலாம். (மண்டல விலையிடல் என்பது உண்மையான போக்குவரத்துச் செலவைவிட, தேவை மற்றும் வழங்கலின் சந்தை நிலவரங்கள் போன்ற உள்ளூர் போட்டி நிலைகளை உள்ளடக்கும் விலைகளை நடைமுறைப்படுத்தலையும் குறிக்கலாம்).
இம்முறையில் சில நகரங்கள் அடிப்படைப் புள்ளிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஒரே அடிப்படைப் புள்ளியிலிருந்து அனுப்பப்படும் சரக்குகளுக்கு ஒரேமாதிரியான விலை அறுதியிடப்படுகிறது.
இம்முறையில் சரக்கை விற்பவரே முழு/பகுதி போக்குவரத்துச் செலவை ஏற்றுக்கொள்கிறார். இதனால் சரக்கின் விலையில் குறிப்பிட்டளவு குறைவதால் இது விற்பனையை அதிகரிக்கக்கூடிய உத்தியாகக் கருதப்படுகிறது. மேற்கோள்கள்தகவல் வாயில்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia