பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை

பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை
பெங்களூரு நீர்வாழ் உயிரி காட்சியகம், சூன் 2016
Map
12°58′35″N 77°35′55″E / 12.9765°N 77.5986°E / 12.9765; 77.5986
திறக்கப்பட்ட தேதி1983[1]
அமைவிடம்பெங்களூரு, கருநாடகம், இந்தியா

பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை, இந்தியாவிலுள்ள நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலைகளில் இரண்டாவது பெரிய காட்சிச்சாலை ஆகும். இது கப்பன் பூங்காவின் நுழைவுவாயில் அருகே உள்ளது. இது 1983ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு பல்வேறு வகையான மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. விசுவரய்யா அருங்காட்சியகத்தின் அருகில் இது அமைந்துள்ளது. இங்கு நுழைவுக்கட்டணமாக ஒருவருக்கு 150 உருபாய் வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு 5 உருபாயும், 5 வயதிற்குட்பட்டவர்கள் கட்டணமின்றியும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனை பெங்களூரு, அரசு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை, என்றும் அழைக்கின்றனர். 

கட்டிடம்

இக்காட்சிச்சாலையானது வைர-வடிவில் அமைந்துள்ளது. மூன்றடுக்கு மாடியில் அமைந்துள்ள இக்காட்சிச்சாலையின் முதல் மாடியில் 14 தொட்டிகளும் இரண்டாவது மாடியில் இரண்டு வரிசைகள் தலா 69 தொட்டிகளுடன் உள்ளது. இக்காட்சிச்சாலை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் திறந்திருக்கும். பிரதிவாரம் செவ்வாய்க்கிழமை விடுமுறை ஆகும்.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள உயிரினங்கள்

விலாங்குகட்லா மீன்பெளி மீன் உட்பட பல்வேறு வகையான மீன் வகைகளும், பிற நீர்வாழ் உயிரினங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1][2]

நிர்வாகம்

கருநாடக மாநில அரசு இக்காட்சிச்சாலையை நிர்வாகித்து வருகிறது.[1] 

படங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Bangalore Aquarium". bangaloreindia.org.uk. City of Bangalore. Retrieved 24 December 2015.
  2. "Cubbon Park:Aquarium". karnataka.com. karnataka.com. Retrieved 24 December 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya