பெஞ்ச் தேசியப் பூங்கா
பெஞ்ச் தேசியப் பூங்கா ( Pench National Park) சியோனி மாவட்டத்தில் 1975 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.[2] இப்பூங்கா 257.26 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது.[1] அண்மை நகரம் சியோனி, பூங்காவிலிருந்து 50 கி.மீ. தூரத்திலுள்ளது. இதன் வானூர்தி நிலையமாகவும், தொடருந்து நிலையமாகவும் நாக்பூர் இருக்கிறது. பூங்காவைப் பார்ப்பதற்கு மார்ச்சிலிருந்து ஜூன் வரை பொருத்தமான காலம் ஆகும். இங்கு ஒய்வில்லங்கள் ஐந்து உள்ளன.[3] ![]() இப்பூங்காவில் வறண்ட இலையுதிர்காடுகளும் புலிகளும் பல்வகையான மான்களும் பறவைகளும் உள்ளன.[4] இங்கு வேங்கை, சோம்பற்கரடி, சாம்பர், கவரிமான், சீதல், குரைக்கும் மான், நாற்கொம்பன், காட்டுநாய், வராகம் முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 44 இல் பௌனியிலிருந்து இப்பூங்காவைச் சென்றடையலாம். இப்பூங்காவிற்கு துரியா, கர்மஜ்கிரி என்ற இரு நுழைவாயிற்கள் உள்ளன.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia