பென்சொடயசெபின்பென்சொடயசெபின் (Benzodiazepines. BZD, BZs), சில நேரங்களில் "பென்சோஸ்" (Benzos) எனப்படும் மருந்துகள், பென்சின் வளையமும் ஒரு டையசெபின் (diazepine) வளையமும் இணைந்து உருவாகும் மருந்துகளின் தொகுதி ஆகும். லிப்ரியம் (Librium) அல்லது குளோர்டையசெபொக்சைடு (chlordiazepoxide) என்றழைக்கப்படும் முதலாவது பென்சோஸ் மருந்தானது, லியோ ஸ்டேர்ன்பெக் எனும் அறிவியலாளரின் ஆய்வில் 1955இல், தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 1963இலிருந்து மருத்துவ சந்தையில் டையசெபம் அல்லது வாலியம் என்றழைக்கப்படும் இன்னொரு பென்சொடயசெபின் மருந்து விற்பனைக்கு வந்தது. 1977 இல் பென்சோஸ் கூட்ட மருந்துகள் உலகில் அதிகம் பரிந்துரைக்கப்படும் மருந்துகளாக இடம்பிடித்தன. [1] இவை உளவியல் நோய்களுக்கான மயக்கமூட்டி மருந்துகளாக பொதுவாகப் பயன்படுகின்றன..[2] பதட்டம், தூக்கமின்மை, வலிப்பு, தசைபிடிப்பு, மதுவுக்கு அடிமையானோரை மீட்டல் முதலிய பல்வேறு நோய்நிலைமைகளுக்கு மருந்தாக பென்சொடயசெபின்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மருத்துவ பயன்கள்மயக்கம், தூக்க ஊக்கி, பதற்றக்குறைவு, வலிப்படக்கி, தசை தளர்வு, மற்றும் நினைவு மறப்பு போன்ற இயல்புகள் பொதுவாக பென்சோஸ் கூட்ட மருந்துகளுக்குரியவை.[3][4] இதைப்பயன்படுத்தி, மதுபோதைக்கு அடிமையானோரை மீட்டல், வலிப்பு, பதற்ற நோய்கள், பதகளிப்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டோர், பீதியடைந்தோர், கிளர்ச்சியடைந்தோர் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுவோர் போன்றோருக்கு சுகம் தர முடியும். பொதுவாக இச்சந்தர்ப்பங்களில் இவை வாய்வழி மருந்தாகவே பயன்படுகின்றன. எனினும் ஊசிவழியிலும், தசை-குருதி ஊடாகவும், குதவழியாகவும் இம்மருந்தை செலுத்த முடியும்..[5]:189 பொதுவாக, பென்சொடயசெபின்கள் சிக்கலில்லாத பாதுகாப்பான, குறுகிய காலத்துக்கு பயன்தரும் திறன் மிக்க மருந்துகளாகும்.[6][7] எனினும் இவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சகிப்புமை, நோயாளிகளை தமக்கு அடிமையாக்கவும் செய்யும். இவற்றின் நீண்டகாலப் பாவனை, சிந்தனை, மனம் சார்ந்த இயக்கம், நினைவாற்றல் போன்றவற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இவற்றின் நீண்டகாலப் பாவனையைக் குறைக்க வேண்டும்..[8][9] மிகை ஊட்டம்![]() பென்சொடயசெபின்களை மிகையாக உள்ளெடுப்பதால் பல சிக்கல்கள் உண்டாவது கண்டறியப்பட்டிருக்கிறது..[11] இந்த மருந்துகளை, மது, அபின் அல்லது மனவழுத்த நிவாரணிகளுடன் கலந்து உட்கொண்டால் நச்சாகும்.[12][13] இவற்றின் மிகையூட்டு காரணமாக இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், மிகையூட்டின் அறிகுறிகளாக நாக்குழறல், அயர்வு, விழி நடுங்குதல், உயர் இரத்த அழுத்தம், மயக்கம் என்பன அமைகின்றன. பக்க விளைவுகள்தசைத்தளர்வு இயல்பால், பென்சொடயசெபின்களைப் பயன்படுத்துவோருக்கு சுவாச அழுத்தம் ஏற்படலாம். எனவே தசைக் களைப்பு, தூக்கத்தில் மூச்சடைப்பு, மூச்சுக்குழாய் அழற்சி, மற்றும் சிஓபிடி முதலான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆளுமைக் கோளாறுகள் அல்லது அறிவுசார் இயலாமை உள்ள நோயாளிகள் இம்மருந்துகளை அடிக்கடி உட்கொண்டால், முரண்பாடான விளைவுகள் ஏற்படலாம். கடும் மன அழுத்தம், உள்ளவர்களில் இம்மருந்துகளின் பாவனை, தற்கொலைத் தூண்டலையும் ஏற்படுத்தலாம்.[14] குடிப்போர், ஆப்பியாய்டு மற்றும் பார்ப்பிசுரேட் பாதிப்புகள் உள்ளோர் பென்சோஸ் மருந்துகளை உட்கொண்டால் உயிராபத்து ஏற்படுமென்பதால், அவர்கள் எச்சரிக்கையாகவே இம்மருந்துகளைக் கையாள வேண்டும். பென்சோஸ்களின் மிகவும் பொதுவான பக்க விளைவுகள் மயக்கம், களைப்பு, குறைவான உணர்வு நிலை என்பனவாகும். உடல் ஒருங்கிணைப்பில் ஏற்படும் கோளாறுகளால் தடுக்கி வீழல், காயங்கள் என்பன - குறிப்பாக - முதியோரில் ஏற்படலாம்.[15][16][17] வாகனம் ஓட்டும் இயல்பு இழக்கப்படுதல், அதனால் ஏற்படும் வீதி விபத்துகள்[18][19] ஆண்மை குறைவு மற்றும் விறைப்புத்தன்மை இல்லாமலாதல், மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் என்பன குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள். அரிதாக அவதானிக்கப்பட்ட பக்க விளைவுகள் குமட்டல்,பசி, மங்கலான பார்வை, குழப்பம்,கொடுங்கனவுகள் என்பன. கர்ப்பகாலம்அமெரிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நடத்திய ஆய்வொன்றில் தாய்வயிற்றில் உள்ள சிசுக்களில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது. [20] பென்சோஸ் மருந்தை உட்கொண்டால் குழந்தை பிளவு அண்ணத்துடன் பிறப்பதற்கு 0.06 முதல் 0.07% விழுக்காடு வரை வாய்ப்புகள் உண்டு. வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கு இவை பொதுவாக ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என்பதால், டையஸிபம் அல்லது குளோர்டையசெபொக்சைடு முதலான ஓரளவு பாதுகாப்பான பென்சோஸ் மருந்துகள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன .[21] ஏனைய ஆபத்தான மருந்துகளையும் மிகக்குறைந்த அளவில் குறுகிய காலத்துக்கு மட்டும் உள்ளெடுக்கும் போது, சிசுவுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவடையக் கூடும்.[22] முதியோர்முதியவர்களில் பென்சோஸ் மருந்துகளின் நன்மைகள் குறைவாகவும் பாதிப்புகள் அதிகமாகவும் உள்ளன.[23][24] முதியவர்கள் இம்மருந்துகளைப் பயன்படுத்தும் போது, அவர்கள் அதற்கு அடிமையாகவும், நினைவாற்றல் கோளாறுகள், உடலியக்க இசைவு இழக்கப்படுதல், விபத்துக்கள், கீழே விழுதல்,[25] இடுப்பு முறிவுகள் ஏற்படல்[26] முதலிய ஆபத்துகளும் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் இம்மருந்துகளுக்கு அவர்கள் அடிமையாகும் போது, டிமென்ஷியா, மன அழுத்தம் அல்லது பதட்டம் அறிகுறிகள் முதலான பிரச்சினைகள் ஏற்பட்டு படிப்படியாக அதிகரிக்கும். இம்மருந்துகளால் தான் இவை ஏற்படுகின்றன என்று அறியாமல், அவை வயதாதலின் அறிகுறிகள் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே, முதியோருக்கு பென்சோஸ் மருந்துகளை குறைந்த காலத்துக்கு, குறைந்த அளவிலேயே பரிந்துரைக்கவேண்டும்.[27] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia