பெரிய காளான்![]() பெரிய காளான் (Calvatia gigantea) என்பது ஒரு பெரிய பந்து வடிவ காளான் ஆகும். இது இராட்சதப் பந்துக் காளான் (Giant puffball) எனவும் அழைக்கப்படுகிறது. இது கோடையின் பிற்பகுதியிலும் இலையுதிர்காலத்திலும் பொதுவாக புல்வெளிகள், வயல்வெளிகள் மற்றும் இலையுதிர் காடுகளில் காணப்படும். இது உலகம் முழுவதும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது.[1] ![]() செடியின் அமைவுஇது ஒரு மிகப்பெரிய காளான் ஆகும். மிசோரி பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, இவ்வகைக் காளான்கள் 20-50 சென்டிமீட்டர் அகலமும் 20-50 செமீ உயரமும் வளரக்கூடியது.[2] ஃபர்ஸ்ட் நேச்சர் என்ற இதழ் இந்தப் பூஞ்சை "80 செமீ விட்டம் வரை வளரக்கூடியதும் பல கிலோகிராம் எடையுடையதும் ஆகும்" என்று விளக்குகிறது.[3] கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள தண்டர் பே என அழைக்கப்படும் ராபின்சன்-சுப்பீரியர் ட்ரீட்டி டெரிட்டரியில் 23 கிலோகிராம்களுக்கு மேல் எடையுள்ள ஒரு காளான் மாதிரி பதிவு செய்யப்பட்டது.[4] உருண்டையான தலைப்பகுதி உடையது. பார்ப்பதற்குப் பந்து போல் இருக்கும். இது திறந்த புல்வெளிகளிலும், மக்கிய கட்டைகளிலும் வளர்கிறது. இது 4 அடி உயரமும், 6 அடி விட்டமும் கொண்டு உள்ளது. இக்காளான் உள்ளே விதைத்துகள் நிறைந்துள்ளது. முதிர்ச்சியடைந்த காளான் மீது மழைத்துளி விழுந்தால் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இக்காளான் பலூன் வெடிப்பதுபோல் வெடித்து இதில் உள்ள விதைத்துகள்கள் ஊதி வெளித்தள்ளப்படுகிறது. இப்பந்துக் காளான் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வளர்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia