பெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்க நாட்டிலுள்ளநியூ செர்சி மாகாணத்தில் உள்ள, மிக அதிக மக்கட்தொகை கொண்ட கவுண்ட்டியாகும்.[2][3] 2014-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சுமார் 933,572,[4] நபர்கள் இங்கு வசிக்கின்றனர். இது 2010-ஆம் ஆண்டின் மக்கட்தொகையான 905,116[5] -ஐ விட 3.1% அதிகமாகும். 2000-களில் 884,118-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.[6]] நியூ செர்சி மாகாணத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இப்பகுதி, நியூயார்க் நகரத்தையொட்டி அமைந்துள்ளது. மன்ஹாட்டானிலிருந்து நேரே வாசிங்க்டன் பாலம் அருகிலும் உள்ளது.
வானிலை
பெர்கன் கவுண்ட்டி, சனவரியில் மிகுந்த குளிர்ந்த பகுதியாகவும், 26.6 °F / -3 °C.[7][8][9] இது கடற்கரையோரமாக அமைந்துள்ளதால் பிற நியூ செர்சி பகுதிகளை விட இங்கு சற்று வெப்பம் குறைந்தே காணப்படுகிறது. 2,400 முதல் 2,800 மணி நேரம் வரை வெயில் இங்கு வருகிறது.[10]
அண்மைக்காலங்களில், பொதுவாக சனவரியில் குறைந்தபட்சமாக 27 °F (−3 °C) முதல் சூலையில் அதிகபட்சமாக 84 °F (29 °C) வரையிலும் உள்ளது. மிகக்குறைந்த அளவாக −15 °F (−26 °C) 1934-ம் ஆண்டு பிப்ரவரியிலும், மிக அதிகமாக 106 °F (41 °C) சூலை 1936-லும் பதிவானது. 3.21 அங்குலங்கள் (82 mm) முதல் 4.60 அங்குலங்கள் (117 mm) வரை அளவிலும் மழை பொழியும்.[11]
மக்கட்தொகை
கொரியா, இந்தியா, இத்தாலி, இரசியா, பாலிசு, சீனம், சப்பான், ஈரான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் இசுலாமியர்கள், யூதர்கள், பல்கானியர்கள், இலத்தீனைச் சேர்ந்தவர்கள் என்ற பல்வேறு தரப்பட்ட மக்கள், பெர்கன் கவுண்ட்டியில் வாழ்ந்து வருகின்றனர்.
ஒரே பாலின தம்பதிகள்
அக்டோபர் 21, 2013-ம் ஆண்டில் முறையாக ஒரே பாலின தம்பதிகளுக்கு அனுமதி வழங்கு முன்பே[12]
2010-ம் ஆண்டின் கணக்கின்படி ஒரே பாலினத்தைச் சார்ந்த சுமார் 160 தம்பதிகள் இங்கு வசிக்கின்றனர்.[13]