 | இந்த article விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: விக்கி வழிகாட்டலின்படி எழுதப்படாத கட்டுரை. உரையாடலிலும் விக்கி வழிகாட்டல் பின்பற்றப்படாமல் பொது உரையாடல் இடம்பெறுகிறது.. மேலும் கருத்துகளை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
பயனர்:AntanO கட்டுரை உருவாக்கியவர்களுக்கு, அவர்களின் பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பு கொடுத்து நீக்கும் விக்கிநடைமுறை, பல பன்னாட்டு சட்ட விதிகளை பின்பற்றும் பொதுவகம்(c:Commons:Templates/Deletion), விக்கியினங்கள்(species:Category:Vandalism templates) திட்டங்களில் நடைமுறை படுத்தப்படுகிறது. இந்த நீக்கப்பட்ட பக்கத்தில் ஒருவர் தெரிந்து கொள்ள வசதியாக எந்த இணைப்பும் இல்லை. "மெய்யறிதன்மை, மேலதிக தகவல்" என்று பொதுவாகக் குறிப்பிடாமல், குறிப்பாக தெரிவித்தல் இணையத்தமிழ் வளர்ச்சிக்கு உதவும். இணையத்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற உரிமத்தில் எழுதும் ஆசிரியர்கள் வெகு குறைவு. கட்டற்ற இத்தளத்தில் நாம் இவர்களைப் பற்றிய குறிப்புகளை பேண வேண்டும். இணையத்தமிழ் வளர, அதற்காக முயற்சி எடுப்பவரை ஊக்குவிப்பதும் நமது கடமையே. வருவோர் அனைவரும் விக்கியை சரியாக புரிந்து கொள்ள, நாம் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். கட்டுரையை பிறரிடம் காட்டி கலந்துரையாட வசதியாக மீள்விக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்றவைகளை பிறருடன் கலந்துரையாடுவோம்.--த♥உழவன் (உரை) 02:03, 30 திசம்பர் 2023 (UTC)Reply
- இப்போது கட்டுரையினைப் பார்த்தேன் குறிப்பிடத்தக்கமைக்கான சான்றுகளை நாம் இணைக்கவில்லை. கட்டற்ற படைப்புகளை வெளியிட்டதால் ஒருவரைக் குறிப்பிடத்தக்கவர் எனக் கொள்ளமுடியாது. வேறு குறிப்பிடத்தக்கமைக்கான சான்றுகளைத் தேடிப்பார்க்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 05:05, 30 திசம்பர் 2023 (UTC)Reply
- நன்றி. எத்தகைய சான்றுகள் தரவேண்டும் என அறிய தாருங்கள். சேலம் மாவட்ட அச்சு நாளிதழ்களில் அவரைப் பற்றிய பல குறிப்புகள் வந்துள்ளன. அவரிடம் பேசி பல மாதங்கள் ஆகின்றன. நீங்கள் சான்று பற்றி கூறினால், நானும் உடன் முயற்சிக்கிறேன். இருப்பினும், எனது தனிப்பட்ட கருத்து யாதெனில், ஆயிரகணக்கில் பதிவிறக்கம் செய்து பலர் படிக்கின்றனர். முக்கியத்துவம் இல்லாமலா, இப்பதிவிறக்கங்கள் நடக்கும் என்றே நான் நினைக்கிறேன். த♥உழவன் (உரை) 03:17, 31 திசம்பர் 2023 (UTC)Reply
- 75க்கும் மேலான அவரது நூல்கள் இங்கே விற்கப் படுகின்றன.
- இங்கே 31 நூல்கள் இங்கே விற்கப் படுகின்றன.
- அச்சு நூல்களின் தொகுப்பு படங்கள்
- பேட்டி - https://www.youtube.com/watch?v=WLAB6aYpqiI
- செய்திகள் -
- மண்டையோட்டு அந்துப்பூச்சி ஏற்காட்டில் கண்டுபிடிப்பு
- https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-salem/news/2590664
- கல்லறையில் நடந்த புத்தக வெளியீடு
- https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-salem/news/1929508
- பயனர்:AntanO குறிப்பிடத்தக்கமைக்கான வேறு என்ற சான்றுகள் வேண்டும் என்று உதாரணப் பக்கங்களோடு விளக்க வேண்டுகிறேன். த.சீனிவாசன் (பேச்சு) 18:49, 28 ஏப்பிரல் 2024 (UTC)
- ஏற்காடு இளங்கோவின் 100ஆவது புத்தகமான, ‘ஏற்காடு வரலாறும் பண்பாடும்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
- https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2023/Jan/07/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3980480.html த.சீனிவாசன் (பேச்சு) 18:56, 28 ஏப்பிரல் 2024 (UTC)
- en:Wikipedia:Biographies of living persons, en:Wikipedia:Notability (people) AntanO (பேச்சு) 18:58, 29 ஏப்பிரல் 2024 (UTC)
விருப்பம் ஏற்காடு இளங்கோ கட்டுரையை, தமிழ் விக்கிப்பீடியாவில் மீள்வித்து பேண, நான் பின்வருவனவற்றை தெரிவிக்க விரும்புகிறேன்.
- c:Category:Files by User:Yercaud-elango என்ற பகுப்பில் தாவரவியல் பெயர்களோடு, படங்களை ஏற்றியுள்ளார். Botanical survey of India என்ற ஒன்றிய அரசு அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற தாவரவியல் அறிஞர். தாவரங்களைத் தேடி பல கி. மீ. காடுகளிலும், மலைகளிலும், ஊர்களிலும் பயணித்தே மேற்கண்ட கோப்புகளை உருவாக்கியுள்ளார். அவர் இட்ட கோப்புகளின் தாவரவியல் பெயர்களை பொதுவகம் போன்ற பன்னாட்டு விதிகளை நடைமுறை படுத்துபவர் ஏற்றுள்ளனர். அவரது திறனுக்காக பன்னாட்டு கலந்துரையாடலுக்கு பாரீசுக்கு அழைக்கப்பட்டார். குடும்ப, உடல் நிலை காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை. மேலும் எனக்குத்தெரிந்த வரை கட்டற்ற உரிமத்தில், கட்டணமின்றி பதிவிறக்கும் செய்து கொள்ளும்படியான, 50-க்கும் மேற்பட்ட அடிப்படை அறிவியல் தமிழ் நூல்களை[1] வெளியிட்டுள்ளார். அந்நூல்கள் பல ஆயிரம் பதிவறிக்கம் செய்யப்பட்டுள்ளன. உரிய சான்றுகளை கட்டுரையை மீள்வித்தால் தருகிறேன். பல தமிழக நாளிதழ்கள், டி. வி. நிகழ்ச்சிகளில் இவர் கருத்துரையாளராக அழைக்கப்பட்டுள்ளார். த♥உழவன் (உரை) 02:19, 30 திசம்பர் 2023 (UTC)Reply
- en:Wikipedia:Biographies of living persons, en:Wikipedia:Notability (people) --~AntanO4task (பேச்சு) 20:45, 30 ஏப்பிரல் 2024 (UTC)
விருப்பம் த.சீனிவாசன் (பேச்சு) 15:03, 30 ஏப்பிரல் 2024 (UTC)
சான்றுகள்
புகழ்ந்துப் பாராட்டும் வகையில் எழுதாது, கலைக்களஞ்சிய நடையில் எழுதி, உரிய மேற்கோள்களைச் சேர்த்தால் கட்டுரை முழுமை பெறும். விக்கிப்பீடியாவில் ஏற்க இயலும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:08, 17 மே 2024 (UTC)Reply
பயனர்:AntanO 100க்கும் மேலான அறிவியல் நூல்களை எழுதியுள்ள ஒரு எழுத்தாளர் பற்றிய கட்டுரை ஏன் குறிப்பிடத் தக்கது அல்ல என்று என்று நினைக்கிறீர்கள் ? வேறு என்ன விவரங்கள், ஆதாரங்கள் சேர்க்க வேண்டும் என்றும் எழுத வேண்டுகிறேன்.
விளக்க வேண்டுகிறேன். த.சீனிவாசன் (பேச்சு) 22:12, 27 நவம்பர் 2024 (UTC)Reply
- en:Wikipedia:Biographies of living persons, en:Wikipedia:Notability (people) AntanO (பேச்சு) 12:22, 5 திசம்பர் 2024 (UTC)Reply
- இக்கட்டுரையில் குறைத்து மதிப்பிடல் மற்றும் மிகைப்படுத்தல் இரண்டும் தவிர்க்கப்பட்டு நடுவுநிலைமையுடன் சார்பற்ற முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நம்பகமான ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எழுத்தாளரைப் பற்றிய உண்மையான தகவல்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. கட்டுரையில் சர்ச்சைக்குரிய உள்ளடக்கமோ மோசமான ஆதாரங்களோ இடம்பெறவில்லை. சுய வெளியீட்டு ஆதாரங்கள் எதுவும் மேற்கோளாகக் கொடுக்கப்படவில்லை. அறிவியல் நூல்களை எழுதியுள்ளவர் என்பதாலும் ஒற்றை ஆதாரம் இல்லாமல் தினமணி, தினமலர், Times of India, ஆனந்த விகடன் ஆகிய பல ஆதாரங்கள் இவருடைய குறிப்பிடத்தக்கமைக்கு வலு சேர்ப்பதாலும் இக்கட்டுரையை தக்கவைக்கலாம் என்று கருதுகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 09:38, 7 திசம்பர் 2024 (UTC)Reply