பேச்சு:கல்சியம்

வலுவான பற்களுக்கும், வலுவான எலும்புகளுக்கும் கால்சியம் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) நோயைத் தவிர்க்கவும் கால்சியம் தேவைப்படுகிறது. இதற்காக தினசரி தேவைப்படும் அளவை சமீபத்தில் கூட்டி அறிவித்துள்ளார்கள். சாதாரணமாக மூன்று அல்லது நான்கு டம்ளர் ஸ்கிம்டு பாலில் ஒரு நாளின் தேவை கிடைக்கும். அபாய அளவைத் தாண்டினால் மலச்சிக்கலும், சிறுநீரகக் கோளாறுகளும் உருவாகலாம்.

கால்சியம் என்பதே பொருத்தமானது. இலங்கை வழக்கு கல்சியம் என்பதாக இருக்கலாம். அப்படியாயின் அதனை கட்டுரையில் தரலாம். மீண்டும் கால்சியம் என்றே தலைப்பை மாற்றுமாறு பரிந்துரைக்கிறேன்.--C.R.Selvakumar 20:21, 29 செப்டெம்பர் 2006 (UTC)செல்வாReply
கால்சியம் என்பதையே முதன்மைப் பக்கமாகக் கொள்ளலாமே!--ரவி 20:33, 29 செப்டெம்பர் 2006 (UTC)Reply
கல்சியம் கட்டுரையை உருவாக்குவதில் மயூரநாதன் ஆரம்பம் முதல் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றார். கால்சியத்திற்கும் மீள்வழிநடத்தல் உள்ளது. அவரின் கருத்தைக் கேட்காமல் மீள்நடத்துவது சரியல்ல

--Umapathy 00:19, 30 செப்டெம்பர் 2006 (UTC)Reply

இலங்கை வழக்கை கட்டுரைத் தலைப்பாகக் கொள்ளக் கூடாது என்ற நடைமுறை ஏதாவது இருக்கிறதா?--கோபி 03:50, 30 செப்டெம்பர் 2006 (UTC)Reply

இலங்கை வழக்கை கட்டுரைத் தலைப்பாக கொள்ளக்கூடாது என்று நடைமுறை எல்லாம் இல்லை. வேறு சில கட்டுரைகளில், இலங்கை வழக்கே முதன்மைத் தலைப்பாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. கல்சியம் என்பதை விட கால்சியம் என்பது ஆங்கில வழக்குக்கு கொஞ்சம் ஒத்து வருவது போல் உள்ளது. தவிர, கல்சியம் என்றால் தமிழ்நாட்டில் புரிந்து கொள்வார்களா என்பது கேள்விக்குரியது--ரவி 08:22, 30 செப்டெம்பர் 2006 (UTC)Reply

கோபி, உமாபதி மற்றும் இலங்கை நண்பர்களுக்கு என் வேண்டுகோள். பிற மொழிச் சொற்களை தமிழ் எழுத்தால் எழுதும் பொழுது மீண்டும் மீண்டும் வேறுபாடுகள் தோன்றுகின்றன. வேற்றுமொழிச் சொற்கள் அவ்வவ் மொழி பேசும் மக்களிடமும் ஒரே வாறு பலுக்குவதில்லை (உச்சரிப்பதில்லை). ஆனால், தமிழ் மொழியானது ஒலிப்பாங்குடன் (எழுத்தும் ஒலியும் முறைசார்ந்து இருப்பதால்), சற்று கவனத்துடனும், ஒற்றுமை, சீர்தரம் முதலிய கருத்துக்களும் உட்கொண்டு எழுத்துப் பெயர்ப்பும், ஒலிப்பெயர்ப்பும் செய்ய வேண்டியுள்ளது. Calcium என்பதை கேல்சியம் எனலாம் அல்லது கால்சியம் எனலாம், கல்சியம் என்பது சொல்வது ஒருசிறிதும் பொருந்துவதில்லை (தமிழில் கல் என்பது குறில் ஒலி). முதலொலி நீட்டித்தான் ஆங்கிலம் பேசுவோர் ஒலிக்கின்றனர். அவ்வொலி, அகர நெடிலுக்கும் எகர நெடிலுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம், ஆனால் நெடில் என்பதில் குழப்பம் இல்லை. ஆங்கிலத்திலே நெடிலும், குறிலும் ஏதும் முறைப்படி எழுத்தில் காட்டுவதில்லை. இது பற்றி அவர்கள் போக்கு தமிழிலிருந்து வேறுபட்டது. மிகப்பெரும்பான்மையான தமிழர்கள் விளங்கிக்கொள்ளுமாறு எழுத்தொலிப்பெயர்ப்புகள் இருப்பது நம் எல்லோருக்கும் நல்லது. இதனை ஏன் இலங்கை நண்பர்கள் ஏற்றுக்கொள்வதில் தயங்குகிறார்கள் என்பது எனக்கு விளங்க வில்லை. பொதுப் பயன்பாட்டிற்குச் சீர் தரம் செய்தல் மிகவும் அவசியம். இதனை அருள்கூர்ந்து ஏதும் அடையாளப் பிரச்சினையாகக் கொள்ளவேண்டாம் என வேண்டுகிறேன். எது பொதுப்பயன்பாட்டுக்கு நல்லது என்று எண்ணிச் செயல்படுவதே சிறந்தது. இவையனைத்தும் என் தனிபட்ட கருத்துக்களே, இவைகளை இங்கே பகிர்வதே என் நோக்கம். --C.R.Selvakumar 13:22, 30 செப்டெம்பர் 2006 (UTC)செல்வாReply
செல்வா , எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது நீங்கள் இந்தியத் தமிழில் பேசினாலும் சரி இலங்கைத் தமிழில் கதைத்தாலும் சரி நான் சரளமாக உரையாடிக் கொள்வேன். நான் மூன்று வருடம் பெங்களூரில் இருந்தேன். எனக்கு இந்தியத் தமிழோ இலங்கைத் தமிழோ பிரச்சினை இல்லை. எனக்கு எப்படி எழுதினாலும் சரிதான். இக்கட்டுரையை உருவாக்குவதில் மயூரநாதன் பெரும் பங்காற்றியிருந்தார் ஆதாலால் அவரின் விருப்பத்தைக் கேட்காமல் வழிமாற்றுவது சரியல்ல என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனாலும் வேறு சிலவிடயங்கள் விவாதிக்கப் படவேண்டும். நான் சிறுவயதில் பாடசலையில் ஆங்கில பாடத்தில் ரயர் என்பதைத் tire என்று எழுதியைத் பிழை என்று கூறி என்னுடைய புள்ளிகளைக் குறைத்ததாக ஞாபகம். இலங்கை ஆசிரியர்கள் அநேகர் கிளிப்பிள்ளை போன்றே செயற்படுகின்றார்கள் வெளியுலக அனுபவமும் சந்தேகமே. இலங்கைப் பாடத்திட்டத்தில் ஒப்படை என்பதையும் நடத்துகின்றார்கள். இவைதொடர்பான தகவல்களைப் பெற மாணவர்கள் கொழும்பு போன்ற இடங்களில் உலாவும் மையங்களுக்கு வருக்கின்றார்கள். இவர்கள் வருங்காலத்திலோ இன்றோ தமிழில் தேடினால் மாற்றுத் தமிழ்நாட்டு ஒலிபெயர்ப்புக்களை இலங்கை ஆசிரியர்கள் எவ்வாறு கையாளப் போகின்றார்கள் என்பதிலும் எனக்குச் சந்தேகம் உள்ளது. எடுத்துக் காட்டக இலங்கையில் உதாரணம் என்றசொல்லைப் பயன்படுத்துகின்றனர் இது எனக்குச் சிங்கள மொழித்தழுவல் போன்றே தோன்றுகின்றே தவிர தமிழ் போலத்தெரியவில்லை. இச்சொல்லை எடுத்துக் காட்டுபோன்று கையாள்கின்றார்கள். தவிர இலங்கையில் முஸ்லீம்களை வேறு ஓர் இனமாகக் கருதுகின்றார்கள் இதுவும் சரியானதல்ல அவர்கள் எந்தமொழியைத் தாய்மொழியாக் கொள்கின்றார்களோ அதையே இனமாகக் கொள்ளவேண்டும். ஆனாலும் இவ்வாறுதான் புள்ளிவிபரவியற் திணைக்களமானது தரவுகளை வெளியிடுகின்றது.
ஒருங்குறி போன்ற நியமங்களினால் தமிழ் இணையத்தில் வளர்வதைப் போன்று நாமும் சீர்தரதரமாயிருப்பதை நல்லதென்பதையே நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஏனையவற்றிற்கு வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கலாம். --Umapathy 02:44, 1 அக்டோபர் 2006 (UTC)Reply

உமாபதி, நிச்சயம் மயூரனாதனின் கருத்து அறியாமல் நகர்த்தப்போவதில்லை. இலங்கை இசுலாமியர்கள் குறித்த உரையாடல், இக்கட்டுரைக்கு தொடர்பற்றது. அதை இங்கு தொடர்ந்த் உரையாடாமல் விட்டுவிடுவோம். உதாரணம் என்று சொல் எடுத்துக்காட்டு என்ற பொருளில் தமிழ்நாட்டிலும் புழக்கத்தில் இருக்கிறது. பிற தென்னிந்திய மொழிகளிலும் வழங்குகிறது. வடமொழி மூலமாக இருக்கலாம். இலங்கை ஆசிரியர்கள் குறித்த செய்தி புதிது. ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ இலங்கைக்கு வெளியே இச்சொல் இப்படியும் வழங்கப்படுகிறது என்ற பரிச்சயத்தை உருவாக்கவாவது விக்கிபீடியா உதவுமே !--ரவி 08:52, 1 அக்டோபர் 2006 (UTC)Reply

ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) - ஒஸ்டியோபொரோசிஸ் (இலங்கை வழக்கு) (பார்க்க: [1])--Kanags 09:07, 1 அக்டோபர் 2006 (UTC)Reply

செல்வா, உமாபதி, உங்களது கருத்துக்கு அதிக மறுப்புக்கள் என்னிடமில்லை. ஆனால் american english, british english என்று இருப்பது போல தமிழகத் தமிழ், ஈழத்தமிழ் என்ற வேறுபாடு நிச்சயம் இருக்கிறது. ஆனால் ஈழம் தமிழர்கள் வாழ முடியாததொன்றாக மாறிவருவதால் குறித்த மொழிக்கூறுகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்சியம் என்பதை தமிழகத்தவருக்கு எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியாதோ அவ்வாறுதான் கால்சியம் என்பதை இலங்கையிற் கற்றவருக்கு விளங்கிக்கொள்ள முடியாது.

மிகப்பெரும்பான்மையான தமிழர்கள் விளங்கிக்கொள்ளுமாறு எழுத்தொலிப்பெயர்ப்புகள் இருப்பது நம் எல்லோருக்கும் நல்லது என்பது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விவாதம் தானென்றாலும் ஒர் ஈழத்தமிழனை உணர்வுபூர்வமாகப் பாதிக்கக்கூடியதாகும். நாம் இலங்கையின் சிறுபான்மையினர். தமிழர் சிங்களம் கற்பது இனப்பிரச்சினைக்குத் தீர்வுதரும் என்று எண்ணிக்கையிற் குறைவைச் சுட்டிக் காட்டிச் சிங்களவர் கூறும் விளக்கங்களைக் கேட்டுச் சலித்துள்ளோம். எல்லா இடங்களிலும் எமது மொழி புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மொழி எமக்கு உணர்வுபூர்வமானது; மிகவும் உணர்வுபூர்வமானது. ஈழத்தமிழர் இன்றல்ல; இன்னும் பல்லாண்டுகளுக்கு எற்கத் தயங்குவார்கள்.

பொதுப் பயன்பாட்டிற்குச் சீர் தரம் செய்தல் மிகவும் அவசியம், உண்மைதான். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னர் செய்திருக்க வேண்டியதொன்றை இணையத்தின் வருகைதான் அவசியமாக்கியிருக்கிறது. ஏனென்றால் ஈழத்தில் ஐதரசன், நைதரசன், ஒட்சிசன், கல்சியம் போன்ற சொற்கள் உருவாக்கப்பட்ட அண்மையிலல்ல. எழுபதுகளின் முன்பேயே உருவாக்கப்பட்டுத் தொடர்ந்து பயன்பாட்டிலுள்ளன. எல்லா வயதினரும் விளங்கிக் கொள்பவையாக உள்ளன.

இந்த உரையாடலுக்குச் சம்பந்தமில்லையெனினும் சிறுவிடயமொன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ரயர், டயர் :-)). நற்கீரன் தன் பெயரை Natkeeran என்றே எழுதுகிறார்....

செல்வா, இவ்விடயம் தொடர்பில் விவாதம் வேண்டாம். இப்பொழுது இவ்வளவுடன் விட்டுவிடுவோம். ஏனெனில் நாம் உழைக்க வேண்டிய விடயப்பரப்புக்கள் அதிகம். பின்னோரு தடவை உரையாடுவோம்.

தமிழுக்கும் தமிழருக்கும் எது நல்லது என்ற கோணத்திற் பார்க்க வேண்டும் என்பதே என் அபிப்பிராயமும். அதில் எமக்குள் கருத்துவேறுபாடில்லைத்தானே :-) நன்றி.--கோபி 16:18, 1 அக்டோபர் 2006 (UTC)Reply

கல்சியம் என்பதே சரி

இங்கே சில உரையாடல்கள் நடந்து கால்சியம் என்று கூற வேண்டும் என்றவாறு பிழையான கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் க ஓசைக்கும் கெ ஓசைக்கும் இடைப்பட்ட ஓசையிலும் குறிலாகவும் மட்டுமே மொழியப்படுகிறது. பார்க்க, கல்சியம். எனவே, கல்சியம் என்று கூறுவதே சரி. கால்சியம் என்பது முற்றிலும் பிழை.--பாஹிம் (பேச்சு) 02:27, 27 செப்டம்பர் 2021 (UTC)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya