பேச்சு:டாப்ளர் விளைவு
எடுத்துக்காட்டுக்கு, முதல் பத்தியை மட்டும் எடுத்துக் கொள்வோம். தற்போது உள்ள கட்டுரையில் பின்வருமாறு எழுதி உள்ளீர்கள்:
தேவைப்படும் மாற்றங்கள்: 1. நோக்கௌபவரிடம் போன்ற எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும். 2. Doppler shift என்பதற்கு டாப்ளர் முறைமாற்று என்பது சரியான தமிழாக்கம் அல்ல. இந்த இடத்தில் டாப்ளர் பெயர்ச்சி என வர வேண்டும். தமிழாக்கம் சொல்லின் சூழலுக்குத் தக்கதாக இருக்க வேண்டும். 3. siren, horn போன்ற ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் தருவது நன்று. தமிழ்ச் சொற்கள் இல்லாத போது பேச்சுப் பக்கத்தில் ஆலோசனை கேட்கலாம். 4. ஆங்கில விக்கி கட்டுரையில் வருவதைப் போல் 'ஆஸ்திரிய இயற்பியலாளர் கிறிஸ்டியன் டாப்ளர் 1842 இல் இதை முன்மொழிந்த பின்னர் பெயரிடப்பட்டது' என்ற சொற்றொடரை இரண்டு காற்புள்ளிகளுக்கு இடையில் எழுதி உள்ளீர்கள். ஆனால், தமிழ்ச் சொற்றொடர் அமைப்பில் இப்படி வராது. தனிச்சொற்றொடராக எழுத வேண்டும். எடுத்துக்காட்டுக்கு: 1842இல், ஆஸ்திரிய இயற்பியலாளர் கிறிஸ்டியன் டாப்ளர் இவ்விளைவை முன்மொழிந்தார். எனவே, அவரின் பெயரே இவ்விளைவுக்குச் சூட்டப்பட்டது. 5. கடைசி சொற்றொடரைப் பின்வருமாறு எழுதலாம்: வெளியிடப்பட்ட அதிர்வெண்ணுடன் ஒப்பிடும்போது, அணுகும் போது பெற்ற அதிர்வெண் கூடுதலாகவும், கடந்து செல்லும்போது பெற்ற அதிர்வெண் சமமாகவும், கடந்து சென்ற பின் பெற்ற அதிர்வெண் குறைவாகவும் உள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய சோகம், ஏற்கனவே இத்தலைப்பில் செல்வாவும் மற்றவர்களும் எழுதி இருந்த அறிமுகத்தை இழந்தது :( --ரவி 20:41, 18 மே 2010 (UTC) |
Portal di Ensiklopedia Dunia