பேச்சு:தெமாகு பெரிய பள்ளிவாசல்


சொல்லின் இறுதியில் ஃ

சொல்லின் இறுதியில் ஃ வருவதில்லையே? இதனை எப்படி ஒலிப்பது? இது போன்ற பயன்பாடுகளைத் தவிர்க்கலாம்--இரவி (பேச்சு) 20:22, 4 சூலை 2012 (UTC)Reply

இதனை தெமாக்கு பெரிய பள்ளிவாசல் எனப் பெயரிடலாம் என்பது என் கருத்து (ஆங்கிலத்தில் Demak Great Mosque என்று உள்ளது). கடைசி மெய்யொலி H என்று முடிவதாக இருந்தால், தெமாஃகு பெரிய பள்ளிவாசல் எனலாம். கடைசியில் வரும் உகரம் குற்றியலுகரமாக ஒலிப்பதாகக் கொள்ளலாம். தெமாகு என்றாலும் சிலர் காற்றொலி ககரமாக ஒலிப்பர், எனவே தெமாக்கு என்பதற்கு மாறாக தெமாகு என்றும் எழுதலாம். --செல்வா (பேச்சு) 21:24, 4 சூலை 2012 (UTC)Reply

வேற்று மொழிச் சொற்களுக்கு ஆங்கில ஒலிப்பைப் பலரும் பின்பற்ற நினைப்பது தவறல்லவா? அத்துடன் சொல்லின் இறுதியில் ஃ வருவது எந்த வகையிற் தவறாகும்? தமிழே அல்லாத வேற்றுமொழி எழுத்துக்களான ஜ, ஸ, ஹ, ஷ போன்றவற்றிலும் தமிழிற் சொல்லின் தொடக்கத்தில் வர முடியாத ர, ட, ல போன்ற எழுத்துக்களிலும் தொடங்கிய கட்டுரைகள் இருக்கும் போது, ஏன் முதற் பக்கக் கட்டுரைகளே இருக்கும் போது சொல்லின் இறுதியில் ஃ வருவது எம்மாத்திரம்? எனினும் தமிழ் இலக்கணத்தில் இது தவறென்றாற் திருத்தலாம். அதற்குரிய இலக்கண ஆதாரம் வேண்டும். அத்துடன், இந்தோனேசிய மொழிகளிற் சொல்லின் இறுதியில் வரும் k ஒலிப்புக் குன்றியே இருக்கும். மிக அரிதாகவே அது ஒலிக்கப்படுவதைக் காணலாம். இங்கு ஆங்கில மொழி வழக்கு எமக்குத் தேவையில்லை. மூல மொழி ஒலிப்பைத் தெரியும் போது ஆங்கிலம் எதற்கு? வேண்டுமானால், இதைப் போன்ற சொற்களுக்குரிய ஒலிப்புக்களை நானே பதிவு செய்து பதிவேற்றுகிறேன். இந்தோனேசிய ஒலிப்புக் குறித்த உரையாடலொன்று சஙீரான் கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் இடம் பெற்றது. அங்கும் ஓர் ஒலிக் கோப்பைத் தரவேற்றிவிடலாம்.--பாஹிம் (பேச்சு) 00:03, 5 சூலை 2012 (UTC)Reply

பாஃகிம், மிக்க நன்றி பேச்சு:சஙீரான் என்னும் பக்கத்தில் என் கருத்தை இட்டிருக்கின்றேன். --செல்வா (பேச்சு) 01:43, 5 சூலை 2012 (UTC)Reply

பாகிம், நான் இங்கு ஆங்கில ஒலிப்பைப் பொருட்படுத்தவில்லை. ஏற்கனவே, பொதுவழக்கின் காரணமாக பல இலக்கணப் பிழைகளை விடுகிறோம் என்பதற்காக இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் புதிய இலக்கணப் பிழைகளை அறிமுகப்படுத்தலாம் என்று பொருள் இல்லை. குறைந்தது, உங்களைப் போன்ற பன்மொழி அறிந்தோராவது இலக்கண விதிகளை மதித்து எழுதினால் முற்காட்டாக இருக்கும். இந்தோனேசிய மொழிகளிற் சொல்லின் இறுதியில் வரும் k ஒலிப்புக் குன்றியும் அரிதாகவே ஒலிக்கப்படுமாறும் இருக்கையில், தமிழில் அதனை எழுதாமலேயே விடலாமே? சொல்லின் இறுதியில் ஃ வரலாமா என்பதற்கு இலக்கண விதி இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறேன். ஆனால், இது வரை அது சொல்லின் இறுதியில் வந்து கண்டதில்லை. ஆய்த எழுத்தில் ஒலிப்பு, பயன்பாடு அறியாமல் பொதுமக்களும் ஊடகங்களும் தாறுமாறாகப் பயன்படுத்துவதால் அது எழுத்து என்ற நிலையில் இருந்து சிதைந்து ஒரு குறி போல் மாறிக் கொண்டிருக்கிறது என்ற கவலையில் தான் மற்ற பல இலக்கணப் பிழைகளை விட்டு இதனைச் சுட்டிக் காட்டக் காரணம். --இரவி (பேச்சு) 08:50, 5 சூலை 2012 (UTC)Reply

இரவி சொல்வது சரியே, பல்வேறு மொழிகளுக்கும் தமிழ் இலக்கணம் வளைந்து கொடுக்கத் தேவையில்லை. செல்வா கூறுவது போல டெமாஹ் என்பதை டெமாகு என்றே எழுதலாம். இது demak (டெமாக்கு) என்ற ஆங்கில முறைப்படி பலுக்காமல் இந்தோனேசிய முறையில் Demah என உச்சரிக்கக்கூடியது.--Kanags \உரையாடுக 09:05, 5 சூலை 2012 (UTC)Reply

நான் எங்கேனும் தமிழ் இலக்கணம் வளைந்து கொடுக்க வேண்டுமென்று கூறவில்லை. தமிழ் ஏற்கனவே வளைந்து கொடுக்கப் போய்த்தான் ஹ, ஷ, ஸ, ஜ, க்ஷ, ஸ்ரீ போன்ற எழுத்துக்களெல்லாம் புகுந்துள்ளன. இங்கு நான் கேட்பது இலக்கண ஆதாரம் மட்டுமே. சொல்லின் இறுதியில் ஆய்த எழுத்து வராதென்பதற்குரிய இலக்கண ஆதாரத்தைக் காட்டினால் அதன் பின்னர் அதனை நீக்கலாம். ஆதாரத்தைக் கூறாமல் வெறுமனே பிழையெனக் கூறினால் ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா.--பாஹிம் (பேச்சு) 16:53, 5 சூலை 2012 (UTC)Reply

தகுந்த விதியை அன்டன் கீழே சுட்டியுள்ளார். தலைப்பையும் உள்ளடக்கத்தையும் மாற்ற வேண்டுகிறேன்--இரவி (பேச்சு) 06:45, 11 சூலை 2012 (UTC)Reply

மாற்றப்பட்டது. --மதனாகரன் (பேச்சு) 11:02, 11 சூலை 2012 (UTC)Reply

ஆய்த எழுத்து

ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. (தொல்காப்பியம்)

ஆய்த எழுத்து தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். ஆகவே அது இடையில் வரவேண்டும். இறுதியிலோ முதலிலோ அல்ல.

எழுத் தெனப் படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே (தொல்காப்பியம்)

சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து. எனவே அது முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது.

--Anton (பேச்சு) 17:57, 5 சூலை 2012 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya