பேச்சு:பூசணி

இப்பக்கத்தினை அனைவரும் தொகுக்குப் படி திறந்து வைக்க எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 01:56, 14 சூன் 2018 (UTC)Reply

ஏன் காக்கப்பட்டது என்று தெரியுமா? --AntanO (பேச்சு) 01:59, 14 சூன் 2018 (UTC)Reply
எதனால்?--உழவன் (உரை) 02:03, 14 சூன் 2018 (UTC)Reply
பக்க வரலாற்றைப் பாருங்கள். தயவுசெய்து காரணத்தை அறிந்த பின் பேசுங்கள். இருவர் நேரமும் மிச்சமாகும். நன்றி. --AntanO (பேச்சு) 02:25, 14 சூன் 2018 (UTC)Reply
சரி. உரையாடல் பக்கம் வெற்றிடமாக இருந்ததால்,நான் செய்ய விரும்பியதைத் தெரிவித்தேன். காரணத்தை,(தேவையற்ற தொகுத்தல் போர்) ஒரு வரி எழுதி இருந்தால் பலரும் எளிமையாகப் புரிந்து கொள்வரென்றே கருதுகிறேன். பலரது நேரமும் மீதமாகும். ஏனெனில், வரலாற்று பக்கத்தினை ஆய்வதை விட, உரையாடல் பக்கத்தினை காண்பவர் அதிகம். அது யாவருக்கும் எளிது. நான் அதனை பின்பற்றுவேன். முடிந்தால் நீங்களும் செய்க. உரையாடல் பக்கம் என்பதே புரிந்துணர்வை அதிகப்படுத்த என்றே கருதுகிறேன். --உழவன் (உரை) 03:21, 14 சூன் 2018 (UTC)Reply
ஒரு கருத்தை முன்வைக்க முன்னர், முன்வைப்பவர் ஏன் முன்வைக்கிறோம் எனத் தெளிவாக இருத்தல் அவசியம். இதனால் மற்றவரின் நேரம் மீதமாகும். இவ்வாறான உரையாடல்களில் எனக்கு ஆர்வம் இல்லை. என்னை பின்பற்றச் சொல்ல வேண்டாம். நன்றி. --AntanO (பேச்சு) 03:55, 15 சூன் 2018 (UTC)Reply

பூசணி குறித்த படங்கள்

கட்டுரை விரிவாக்கத்திற்கு உதவும் தேர்ந்து எடுக்கப்பட்ட படங்களைப் பயன் படுத்த எத்தகைய நடைமுறை பின்பற்ற வேண்டும். இது போன்ற படக் காட்சியகங்களில் எண்ணிக்கைக் குறித்த வரைமுறை ஏதேனும் உள்ளதா? ஒரு கட்டுரைக்குறித்த படங்களை உருவாக்குதல் அல்லது எடுத்தல் என்பது உரை எழுதுவதை விட கடினம். அதற்கான நேரமும் அதிகம். என்ன நடைமுறையை நாம் பின்பற்றலாம். இதனால் பின்னால் செய்யப்படும் உழைப்பும், நேரமும் மீதமாகும். --உழவன் (உரை) 02:55, 15 சூன் 2018 (UTC)Reply

பயனர்களின் எண்ணங்கள்

விக்கி வழிகாட்டல்கள்/கொள்கைகள்

--AntanO (பேச்சு) 04:01, 15 சூன் 2018 (UTC)Reply

மேலே அன்டன் குறிப்பிட்டுள்ள பக்கங்கள் தேவையான வழிகாட்டலை வழங்குகின்றன. தேவைப்பட்டால் நீங்கள் காட்சிப்படுத்த விரும்பும் படங்களைத் தனிப்பகுப்பாக இட்டு காமன்சுக்கு இணைப்பு தரலாம். --இரவி (பேச்சு) 07:07, 15 சூன் 2018 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya