பேச்சு:போதி தருமன்விக்கிப்பீடியாவில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டாம். அதற்கான இடம் இதுவல்ல. காண்க - விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும். இக்கட்டுரையை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:27, 20 சூலை 2011 (UTC)
Sodabottle , this is not an original research. in shoalin temple there was a rockcut. and now also chinese and japanese martial arts teachers come to buddha kanchi temple and see that sculptures. i can't see that shoalin rockcut. but when i was studying in kanchi i saw chinese and japanese martial arts teachers. and also in this linkவிக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும், they said that participants can use their practical knowledge. when i was studying karate i hear this from my karate teacher. and chinese rockcut is one of the proof. in what basic you say it is research? and i'll extend this essay. i request you to hold your removing essay request. and again, this is not the research. தென்காசி சுப்பிரமணியன்
விக்கி நூல்கள் , ஆய்வுக் கட்டுரை எழுதப்படும். ஆனால் ஓன்றில் மட்டும் ஐயம். "chinese rockcut உள்ளது தகவல், அதனால் குஃங்பூ இங்கிருந்து அங்கு போனது என்று சொல்வது research." என்றுள்ளீர். ஆனால் சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது. இதை தகவலென்பதை விட ஆதாரமென்பதே சரி. then what basic you say it is research? தென்காசி சுப்பிரமணியன்
இக்கட்டுரையை நீக்கத் தேவையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனை நீக்குகிறேன். பேச்சுப் பக்கத்தை பயனரின் மேலதிக உரையாடலுக்காக இப்பக்கத்தை விட்டுவைக்கிறேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:04, 20 சூலை 2011 (UTC) surya prakash, குங்ஃபூவை உருவாக்கிய பல்லவனின் உட்தொகுப்பு சேர்க்க படும் முன்பே கட்டுரை விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்களுக்குட்பட்டுவிட்டது. அதுவே என் கேள்வி. that's why i told sodabottle to don't remove the essayதென்காசி சுப்பிரமணியன்
விக்கிநூல்கள், பொதுவாக பாடநூல்கள் போன்றவற்றை எழுதுவதற்கே உகந்த தளமாக இருக்கும். புத்தாய்வுகளை அங்கே இடுவதும் பொருத்தமாக இருக்காது. விக்கி என்றாலே ஒரு நம்பகத்தன்மை உள்ளது. எனவே, எல்லா விக்கித்திட்டங்களிலும் நிறுவபட்ட விசயங்களை மட்டும் எழுதுவது நன்று--இரவி 10:48, 20 சூலை 2011 (UTC)
நீக்கப்பட்ட உள்ளடக்கம்தற்காப்புக்கலைகளின் பெயர்க்காரணம்1.குங்ஃபூ (குங் + ஃபூ) குங்-கை, ஃபூ-வெற்று. 2.கராத்தே (கரா + தே) கரா-கை, தே-வெற்று. குங்ஃபூ என்றால் வெற்றுக்கைகளை மட்டும் கொண்டு செய்யும் தற்காப்புக்கலை.
பல்லவர் வரலாறுமுற்காலப் பல்லவர்கள்
பிற்காலப் பல்லவர்
பதிவுகள்1.கல்வெட்டு
2.டான்லின் பதிவுகள் (Tánlín)
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
4.பௌத்த காஞ்சி கோயில்
5.ப்ராஃடன் கூறுவது
6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
7. 28 குருமார் வரிசை
குங்ஃபூ பல்லவனை நிறுவுவோர் வாதங்கள்1. மேலுள்ள (1-3) பதிவுகளை கொண்டு சோலின் குங்ஃபூவை உருவாக்கிய தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா காஞ்சியை ஆண்ட பல்லவப் பேரரசரின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. 2. தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர். 3. மேலும் போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர். 4.கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
5.கால ஒற்றுமை
மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது மிகப்பெறும் கால ஒற்றுமை. மேலும் பார்க்கஉசாத்துணை
7 aam arivuThe Tamil film 7aam arivu made from this story. tamil film 7 aam arivuThe Tamil film 7aam arivu made from this story. T.Ramar.Kallakurichi ஏழாம் அறிவு(தமிழர் நன்றி மறந்தவர் அல்ல)இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் தமிழர்கள் போதிதருமனை மறந்ததாக கூறுகின்றனர். அதற்கு மேல் யோசிப்பது இல்லை.
அதனால் தமிழர் போதிதருமனை மறந்ததாக தயவு செய்து எவரும் கருதவோ இக்கருத்தை பரப்பவோ வேண்டாம்.--தென்காசி சுப்பிரமணியன் 05:44, 31 அக்டோபர் 2011 (UTC)
இந்தக் கட்டுரையில் அபத்தமான ஆராய்ச்சி நடக்கிறது. எந்தவொரு முறையான வரலாற்று ஆவணமும் ஆதாரமாகச் சுட்டப்படவில்லை. போதி தர்மர் ஒரு தமிழரென்பதற்கு எந்தவொரு முறையான ஆதாரமும் இல்லை.--பாஹிம் 05:55, 5 நவம்பர் 2011 (UTC)
”தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது” இதுவே கட்டுரையில் உள்ள வரி. மிகக் கவனமாக தமிழர் என்று ஊகிக்காமல், வரலாற்று ஆசிரியர்கள் சொல்லியதை மட்டும் மீண்டும் சொல்கிறது. அதுவும் அறுதியிட்டு உண்மையெனக் கூறாமல் “கருதப்படுகிறது” என்று சொல்கிறது. இக்கட்டுரையில் அறுதியிட்டு எதையும் சொல்லாமல் “கருதப்படுகிறது”, “நிறுவுவோர் வாதங்கள்” என்ற பயன்பாடுகளே உள்ளன. இது தான் உண்மை என்று எதுவும் தரப்படவில்லை. “அபத்தமான ஆராய்ச்சி” போன்ற சொற்பிரோயகங்களை பயன்படுத்துவதை அருள் கூர்ந்து தவிருங்கள். பின்வரும் சான்று நீங்கள் இட்டிருக்கும் சான்று தேவை வார்ப்புருக்களை நீக்கப்போதுமானது. எனினும் பல்லவர் “தமிழரா” இல்லையா என்பதில் கூட சர்ச்சை இருப்பதால், “பல்லவர்”, “காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்”, “பல்லவ அரசனின் மூன்றாவது மகன்” என மிகப் பெரும்பாலான மூன்றாம் நிலைத் தரவுகள் ஒப்புக் கொள்வதை மட்டும் “கருதுகிறார்கள்” என்ற தந்துள்ளோம். (அரசன் என்பதை இளவரசன் என்று மாற்றி விட்டேன்)
--சோடாபாட்டில்உரையாடுக 06:32, 5 நவம்பர் 2011 (UTC) பாஹிம், இங்கே ஏழாம் அறிவு திரைப்படத்தை பர்த்துவிட்டு மக்கள் சில விசயங்களை தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே என் கருத்தை பேச்சு பக்கத்தில் மட்டும் தந்தேன். அதாவது இதை பார்த்தவுடன் தமிழர் நன்றி மறந்தவர் என இங்கு கூறிவருவதே பிரச்சனை.(பல்லவர் தமிழரா என்று இங்கு கூறவரவில்லை) தமிழர் நன்றி மறவாதவர் என்பதையே கூற வந்தேன். இதே போல் தமிழ் புத்தாண்டு, சேது பகுதி குறித்த கட்டுரைகளிலும் கட்டுரைப்பக்கத்திலேயே இருதரப்பு முக்கிய வாதங்கள், சான்றுகள் இருப்பதையும் காணலாம். இதை போல் நிறுவப்படாத கட்டுரைகளில் இப்போது உள்ள வாதங்களே நாளை ஆதாரங்களாகவும் மாறக்கூடும். அதனால் இதைப்போலுள்ள கட்டுரைகளில் இரு தரப்பின் முக்கிய வாதங்களையும் அதற்கு அவர்கள் காட்டும் சான்றுகளையும் நெட்டி முழக்காமல் குறுகியதாக தருவது இங்கு இன்றியமையாதது. இங்கு அப்படியே தரப்பட்டுள்ளது. நான் கூறியதில் தவறிருந்தால் பொருக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் 09:00, 5 நவம்பர் 2011 (UTC) ஒரு கேள்விபோதி தருமர் பாரசீகரென அவரது சமகாலத்தவரான யாங் சுவான்சீ கூறும் அதேவேளை அவர் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் என்று அவரது மற்றொரு சமகாலத்தவரான தான்லின் கூறுகிறார். ஆங்கில விக்கிக் கட்டுரையில் போதி தருமரின் பிறப்பிடம் பற்றிப் பின்வரும் கூற்று உள்ளது: There have been many different versions about his place of birth, one being that he is from Kanchipuram in Tamil Nadu, India. பின் வந்த சிலர் அவரைப் பல்லவ மரபினர் என்கின்றனர். எனினும் இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. போதி தருமரின் காலத்தில் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதி பல்லவ ஆளுகையில் இருந்ததா?--பாஹிம் 13:24, 5 நவம்பர் 2011 (UTC)
பதில்கள்
//போதி தருமரின் காலத்தில் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதி பல்லவ ஆளுகையில் இருந்ததா?// ஆம். இதற்கான ஊக வரைபடம் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்னும் புத்தகத்தில் உள்ளது. அதில் களப்பிரர் காலத்தில் மூவேந்தர் அவருக்கு கீழ் இருந்ததாகவும், பல்லவர் சுய ஆட்சி செய்ததாகவும் கூறி அந்த படத்தை வரைந்துள்ளார். //கடைமகனை தானமளித்தல்// இதற்கான சான்று பண்டைத்தடயம் புத்தகத்தில் உள்ளது. அதாவது முதலில் பிறந்த மகனை நாடாள வைத்துவிட்டு கடைசியாக பிறந்தவனை புத்தமத போதனை செய்ய அனுப்பிவிடுவர். //முதற்பத்தி மற்றும் டான்லின் பதிவுகளில் கந்தவர்மனை இணைத்தவர்கள்// டான்லின் பதிவுகளில் கந்தவர்மனை இணைத்தவர் thyagu pillai என்ற விக்கிப்பீடியர். இவரிடம் டான்லின் பதிவுகளில் கந்தவர்மன் பெயரிருந்ததா என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவரிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறியிருந்தார். முதற்பத்தியில் கந்தவர்மனை இணைத்தவர் jayarathina madharasan என்ற விக்கிப்பீடியர். அவர் உரைதிருத்தம் செய்யும் போது இதை பற்றி அறியாமல் உள்ளே இருந்ததை முதற்பத்தியில் சேர்த்திருக்கலாம். சோலின் கல்வெட்டுஇதைப்பற்றி நான் 7 மாதங்களுக்கு முன் ஒரு வார இதழில் படித்திருந்தேன். அப்படி ஒன்று இருப்பதாக இணையத்தில் இல்லை. சோடாபாட்டிலின் பேச்சுப்பக்கத்தை பார்த்த போது பாஹிம் அவரின் சீனாவில் பயின்ற சகோதரர் பற்றி கூறியிருந்தார். அவரிடம் இதை பற்றி கேட்க வேண்டுகிறேன். இதை எழுதிய போது விக்கிமுறைகளை அவ்வளவாக கற்கவில்லை. அப்படி ஒரு கல்வெட்டு இல்லையென தெரிய வந்தால் அதை நீக்க வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் 17:37, 5 நவம்பர் 2011 (UTC) தென்காசி சுப்பிரமணியன், தான்லினின் பதிவை நான் கட்டுரையிற் சேர்த்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். மேலும், என்னுடைய தம்பி ஷாஒலின் ஆலயத்துக்குச் சென்றிருக்கிறான். குங்பூவில் பதக்கமும் பெற்றிருக்கிறான். கல்வெட்டு பற்றிக் கூறியதாக ஞாபகம் இல்லை. கேட்டுச் சொல்கிறேன்.--பாஹிம் 18:14, 5 நவம்பர் 2011 (UTC) போதிதருமர் கால பல்லவநாடு![]() போதிதருமர் காலத்தில் பல்லவர் மேற்குப்பகுதியை ஆண்டனரா என்று பாஹிம் கேட்டதற்கு நான் ஆம் எனக்கூறி களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்) என்னும் நூலை மேற்கோள் காட்டியிருந்தேன். ஆனால் அதில் தென்னிந்தியாவின் கிழக்குப்பகுதியையே பல்லவர் நாடு என்று கா. அப்பாத்துரை வரைந்திருந்தார். நான் மறந்து மேற்கு பகுதியை ஆண்டதாக தவறாகக் குறிப்பிட்டதால் அதை தற்போது கட்டுரையில் இருந்து நீக்கியுள்ளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:27, 2 சூலை 2012 (UTC) |
Portal di Ensiklopedia Dunia