பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு
பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு (Potassium peroxymonosulfate) என்பது KHSO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எம்.பி. எசு., பொட்டாசியம் மோனோபெர்சல்பேட்டு, பொட்டாசியம் கரோட்டு, மோனோ பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள், இவற்றை தவிர்த்து கரோட்டு மற்றும் ஆக்சோன், என்ற வர்த்தக பெயர்களும் இதை அடையாளப்படுத்துகின்றன. மற்றும் குளம் மற்றும் ஆரோக்கிய நீரூற்றுக் குளம் போன்ற பகுதிகளில் குளோரின் அல்லாத ஒரு நீர் துப்புரவாக்கியாக இது கருதப்படுகிறது [2][3][4]). ஆக்சிசனேற்ற முகவராக பரவலாகப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு சேர்மத்தை பெராக்சி மோனோகந்தக அமிலத்தின் ஒரு பொட்டாசியம் உப்பு என்று கருதலாம். 2KHSO 5 • KHSO 4 • K 2 SO 4 என்ற பகுதிக்கூறு உப்புகளால் ஆக்கப்படும் இந்த மூவுப்பு ஆக்சோன் என்ற வர்த்தகப் பெயரால் பரவலாக அறியப்படுகிறது. இது அதிக நிலைப்புத் தன்மையுடன் கூடிய ஒரு வடிவம் ஆகும் [5]. இந்த சேர்மத்திற்கான நிலையான மின்முனை திறன் +1.81 வோல்ட்டு ஆகும். இது ஐதரசன் சல்பேட்டை (pH = 0) உருவாக்கும் ஓர் அரை வினையாகும்.
வினைகள்பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு ஒரு பல்துறை ஆக்சிசனேற்றியாகும். இது ஆல்டிகைடுகளை கார்பாக்சிலிக் அமிலங்களுக்கு ஆக்சிசனேற்றுகிறது; ஆல்ககால் கரைப்பான்களின் முன்னிலையில், எசுத்தர்கள் இதிலிருந்து பெறப்படுகின்றன. அதிக எண்ணிக்கை கார்பன் அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள உட்புற ஆல்க்கீன்கள் இரண்டு கார்பாக்சிலிக் அமிலங்களாக பிளவுபடுத்தப்படுகின்றன [6]. இதேபோல விளிம்பு நிலையில் உள்ள குறைந்த அளவு எண்ணிக்கையில் கார்பன் அணுக்களை கொண்டுள்ள ஆல்க்கீன்கள் எப்பாக்சினேற்றம் அடைகின்றன. மேலும் இவ்வினையில் சல்பைடுகள் சல்போன்களையும், மூவிணைய அமீன்கள் அமீன் ஆக்சைடுகளையும், பாசுப்பீன்கள் பாசுபீன் ஆக்சைடுகளையும் தருகின்றன . இந்த உப்பின் ஆக்சிசனேற்ற ஆற்றலை விளக்க கொடுக்கப்பட்டுள்ள கீழேயுள்ள வேதி வினையில் ஓர் அக்ரிடின் வழித்தோன்றலை அதனுடன் தொடர்புடைய என்-ஆக்சைடாக மாற்றுவதாகும். ![]() ஒரு சல்பைடை 2 சமமான சல்போன்களாக பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு ஆக்சிசனேற்றம் செய்கிறது[7].சல்பாக்சைடை சல்போனாக மாற்றும் வேதி வினையை விட சல்பைடை சல்பாக்சைடாக மாற்றும் ஒரு சமவினை மிக வேகமாக நிகழ்கிறது. எனவே விருப்பத்திற்கு ஏற்ப இந்த வினையை வசதியாக எந்த கட்டத்திலும் நிறுத்தி வைக்க முடியும். ![]() பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பெட்டு கீட்டோன்களுடனும் வேதி வினையில் ஈடுபட்டு டையாக்சிரேன்களைக் கொடுக்கிறது. டைமெத்தில் டையாக்சிரேன் தயாரிக்கப்படும் தொகுப்பு வினையில் இதுவொரு பிரதிநிதியாகும். இந்த ஆக்சிசனேற்ற முகவர்கள் பல்துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒலிபீன்களை எப்பாக்சிசனேற்றம் செய்யவும் இவை பயன்படுகின்றன. குறிப்பாக, தொடக்க நிலை கீட்டோன் ஒரு சமச்சீர் சேர்மமாக இருந்தால் எப்பாக்சைடு ஆடியெதிர் உரு தெரிவு முறையில் உருவாக்கப்படலாம், இது ஆல்க்கீன்களின் சமச்சீரற்ற எப்பாக்சிசனேற்றமான சை எப்பாக்சிசனேற்ற முறைக்கு ஓர் அடிப்படையாக அமைகிறது[8] ![]() . பயன்கள்நீரைத் தெளிவாக வைத்திருக்க பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்ட்டு நீச்சல் குளங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் குளங்களில் உள்ள குளோரின் தண்ணீரை தெளிவுபடுத்துவதற்கு பதிலாக தண்ணீரை சுத்தப்படுத்தும் வேலையை செய்ய அனுமதிக்கிறது, இதன் விளைவாக குளங்களை சுத்தமாக வைத்திருக்க குறைந்த அளவு குளோரின் மட்டுமே போதுமானதாக உள்ளது. குளங்களில் பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டைப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகளில் ஒன்றாக கருதப்படுவது டிபிடி # 3 நீர் பரிசோதனையில் கிடைக்கும் ஒருங்கிணைந்த குளோரின் அளவு குறைவு ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia