பொது அயனி விளைவுபொது அயனி விளைவு (Common ion effect) என்பது ஓர் உப்பின் பிரிகை வீதம், பொது அயனியை சேர்ப்பதால் குறைவதே ஆகும். ஒரு கரையக்கூடிய உப்பை (A+C-) பொது அயனி (A+) உள்ள மற்றொரு உப்புக் (A+B-) கரைசலுடன் சேர்க்கும்போது அவ்வுப்பின் AB பிரிகையடைதல் குறைக்கப்படுகிறது. உப்பு (AC) சேர்க்கும்போது A+ ன் செறிவு அதிகரிக்கிறது. எனவே லீ சாட்லியர் தத்துவப்படி சமநிலையானது இடது பக்கம் நோக்கி நகர்வதால், A+ அயனிகளின் செறிவு குறைகிறது அல்லது AB பிரிகைவீதம் குறைகிறது.
பொது அயனி விளைவு என்பது ஒரு பொதுவான அயனியைக் கொண்ட ஒரு பலவீனமான மின்பகுளியின் பிரிகைவீதத்தை குறைப்பதாகும்.[1] கரைதிறன் விளைவுகள்பகுதியளவு கரையக்கூடிய உப்பின் கரைதிறன், கரைசலில் பொதுவான அயனியைக் கொண்டிருக்கும்போது அதன் கரைதிறன் குறைக்கப்படுகிறது. வெள்ளி குளோரைடின் (AgCl) மீதெவிட்டிய கரைசலில் சோடியம் குளோரைடை (NaCl) சேர்க்கும்போது, AgCl கரைதிறன் (பகுதியளவு கரையும் உப்பு) குறைகிறது.[2] தாங்கல் கரைசல் விளைவுதாங்கல் கரைசல் அமிலம் மற்றும் அதன் இணை காரம் அல்லது காரம் மற்றும் அதன் இணை அமிலம் உள்ள கரைசலே தாங்கல் கரைசல் எனப்படுகிறது.[3] இணை அயனியை சேர்க்கும்போது தாங்கல் கரைசலின் pH மதிப்பு மாறுகிறது. எடுத்துக்காட்டாக சோடியம் அசிட்டேட் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகிய இரண்டும் கரைந்துள்ள கரைசலில் இவை இரண்டுமே பிரிகை மற்றும் அயனியாக்கமடைந்து அசிட்டேட் அயனிகளை தருகின்றன. சோடியம் அசிடேட் ஒரு வலிமைமிகு மின்பகுளி, எனவே இது முற்றிலும் கரைசலில் பிரிகையடைகிறது. அசிட்டிக் அமிலம் ஒரு வலிமை குறை அமிலம், எனவே அது சிறிதளவே அயனியாக்கமடைகிறது. லீ சாட்லியர் கொள்கைப்படி, சோடியம் அசிட்டேடிலிருந்து உருவான கரைசலில் உருவான அசிட்டேட் அயனி, அசிட்டிக் அமிலத்தின் அயனியாதலை தடைசெய்வதால் கரைசலின் வேதிச்சமநிலை இடது பக்கம் நகர்கிறது. அசிட்டிக் அமிலத்தின் பிரிகைவீதம் குறைவதால் கரைசலின் pH மதிப்பு உயருகிறது.
ஐதரசன் அயனியின் செறிவு குறைவதால் பொது அயனி கரைசலின் அமிலத்தன்மை அசிட்டிக் அமிலக் கரைசலின் அமிலத்தன்மையை விட குறைகிறது.
சான்று : CH3COOH + CH3COONa
சான்று : NH4OH + NH4Cl விதிவிலக்குகள்பல இடைநிலை உலோகச் சேர்மங்கள் இந்த விதிகளை மீறுகின்றன. ஏனெனில் அணைவு அயனிகள் உருவாதலே ஆகும். உதாரணமாக, செம்பு (I) குளோரைடு நீரில் கரையாது, ஆனால் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சேர்க்கப்படும் போது குளோரைடு அயனிகளில் அது கரைகிறது. கரையக்கூடிய CuCl2 அணைவுச் சேர்மங்கள் உருவாதலே இந்த உப்பு கரைதலுக்கான காரணமாகும். அசாதாரண அயனி விளைவுஇந்த "அசாதாரண அயனி விளைவு" (மேலும் "உப்பு விளைவு" அல்லது "மாறுபட்ட அயனி விளைவு") என்று அழைக்கப்படுகிறது. மொத்த அயனி செறிவு அதிகரிக்கும்போது, கரைசலினுள் இடையீட்டு அயனியன் ஈர்ப்பு முக்கிய காரணியாக உள்ளது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia