போட்டோட்ரோபின்போட்டோட்ரோபின்கள் (Phototropins) என்பது ஒளியீர்ப்புப் புரதங்கள் (முக்கியமாக பிளாவோபுரதங்கள்) ஆகும். இவை உயர் தாவரங்களில் ஒளியினால் ஏற்படும் பல்வேறு விளைவுகளுக்குக் காரணமாக உள்ளது. இவை சைட்டோகுரோம்கள் மற்றும் பைட்டோகுரோம்கள் ஆகியவற்றுடன் இணைந்த ஒளிச்சூழலில் பல்வேறு விதமான வளர்ச்சி மாற்றங்களை தாவரங்களில் ஏற்படுத்துகிறது. மேலும் இவை இலை துளைகள் திறப்பதிலும் மற்றும் பசுங்கணிகங்களின் நகர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது. போட்டோட்ரோபின்கள் என்பது தாவரங்களில் உள்ள ஒளித்தூண்டல் உணர்வமைப்பின் ஒரு பகுதியாகும். இவை பல்வேறு விதமான புறத்தூண்டல் விளைவுகளை தாவரங்களில் உருவாக்குகிறது. குறிப்பாக தண்டானது ஒளியை நோக்கி வளைவதற்கும் மற்றும் இலைத்துளை திறப்பதற்கும் காரணமாக உள்ளது. மேலும் இவைகள் செல்களில் பசுங்கனிகங்களின் நகர்ச்சிக்குக் காரணமாக உள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது.[1][2] அத்துடன் ஊதா நிற ஒளியில் போட்டோட்ராபின்கள் சைட்டோகுரோம் செயல்பாட்டிற்கு முன்னதாக தண்டு நீட்சியை தோற்றுவிக்கிறது.[3] மேலும் இவை செல்களில் ஊதா நிற ஒளியில் மொழியாக்கம் செய்யப்பட்ட குறிப்பு சார் தூதாறனைகள் உருவாக்கத்திலும் பயன்படுகிறது. மேற்கோள்கள்
ஏனைய உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia