போலி நிலா![]() ![]() ![]() போலி நிலா அல்லது சந்திர நாய்கள் (Moon dog) என்பது ஒரு வளிமண்டல ஒளியியல் நிகழ்வாகும். வானிலை ஆய்வில் பாராசெலீன் என்றும் அழைக்கப்படுகிறது.[1] ) (இதன் அர்த்தம் நிலவிற்கு பக்கத்தில்) என்பது ஒப்பீட்டளவில் அரிய பிரகாசமான வட்டமான சந்திர ஒளிவட்டம். இதற்குக் காரணம் உயர் வானத்து முகில் வகை அல்லது மென்னடுக்கு முகிலின் அறுங்கோண படிகங்கள் வடிவுடைய பனிக்கட்டியின் நிலவொளி விலகல் ஆகும்.[2] ஒளிவட்ட குடும்பத்தைச் சேர்ந்த சந்திர நாய்கள், சிரஸ் அல்லது சிரோஸ்ட்ராடஸ் மேகங்களில் உள்ள அறுகோண-தட்டு வடிவ பனி படிகங்களால் நிலவொளியின் ஒளி முறிவு காரணமாக ஏற்படுகிறது. அவை பொதுவாக இரு மங்கலான ஒளித் திட்டுகளாக, சந்திரனின் இடது மற்றும் வலதுபுறத்தில் சுமார் 22° மற்றும் நிலவின் அடிவானத்திற்கு மேலே அதே உயரத்தில் தோன்றும். அவை 22° ஒளிவட்டத்துடன் கூட தோன்றலாம்.[3] போலி நிலா தோன்றும் இடம், நிலவிற்கு வெளியே சுமார் 10 விட்டங்கள் ஆகும். இவைகள் சரியாக போலி சூரியனுக்கு இணையானது. ஆனால் மிக அரிதானது, ஏனென்றால் கூர்ந்து கவனிக்க நிலவு பிரகாசமாக இருக்க வேண்டும். போலி நிலவை சாதாரண கண்களால் பார்க்க முடியாது ஏனென்றால் இதன் வெளிச்சம் பிரகாசமாக இருப்பதில்லை. கண்களின் கூம்பு உயிரணு செயல்படுத்தும் அளவுக்கு அவற்றின் ஒளி வெளிச்சம் இல்லாததால், போலி நிலாக்கள் மனிதக் கண்ணுக்கு சிறிய நிறத்தைக் காட்டுகின்றன.[4] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia