மகடூஉ முன்னிலை (இலக்கணம்)

தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில், மகடூஉ முன்னிலை என்பது, எதிரில் உள்ள பெண்ணொருத்திக்குச் சொல்வதுபோல் பாடல்களை எழுதும் ஒரு முறையைக் குறிக்கும். மகடூஉ என்பது பெண்ணைக் குறிக்கும் ஒரு சொல். முன்னிலை என்பது முன்னே இருப்பதாகக் கருதுவதைக் குறிக்கிறது.

சமணர்களால் எழுதப்பட்ட யாப்பருங்கலக் காரிகை, நேமிநாதம் முதலிய இலக்கண நூல்கள் மகடூஉ முன்னிலையாக அமைந்தவை. காரிகை என்பது பெண்ணைக் குறிக்கிறது. பெண்ணை முன்னிலைப்படுத்தி எழுதியதாலேயே யாப்பருங்கலக் காரிகை என்ற பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.

சிறியவர் எய்திய செல்வத்தின், மாண்ட
பெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;-
மது மயங்கு பூங் கோதை மாணிழாய்!-மோரின்
முது நெய் தீது ஆகலோ இல். [1]

இப்பாடலில் மது மயங்கு பூங் கோதை மாணிழாய்! என்பது மகடூஉ முன்னிலை.

இவற்றையும் பார்க்கவும்

அடிக்குறிப்பு

  1. பழமொழி 70
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya