மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம்![]() மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம் இக்காப்பகம் 885 ச.கி. மீட்டர் பரப்பளவுடன் ஜனவரி 1989ஆம் ஆண்டு இந்தியாவின் ஒன்பதாவது உயிர்க்கோளக் காப்பகமாக யுனெஸ்கோவின் மனிதனும் உயிர்க்கோளமும் என்ற திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.[1] தற்போது சுமார் 1044 ச.கி. மீட்டரில் பரவியுள்ள இக்காப்பகம் இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தென்கோடியில் தீவின் 85% ஆக உள்ள மகா நிக்கோபர் தீவில் அமைந்துள்ளது. புவியியல்அந்தமான் நிக்கோபார் பகுதி 325 தீவுகளை உள்ளடக்கியது. வங்காள விரிவுகுடாவில் அமைந்துள்ள இக்காப்பகத்தின் கிழக்கே இந்தியப் பெருங்கடலும் சுமாத்ராவின் ஒரு தீவான இந்தோனேசியத் தீவுக்கு 190 கி.மீ வடக்கிலும் அமைந்துள்ளது. வடக்கு பகுதியில் அந்தமானும் தெற்கு பகுதியில் நிக்கோபாரும் உள்ளது. இருதீவுகளுக்கு இடைபட்ட தூரம் 160 கிலோமீட்டராகும். இங்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையும் பொழிகிறது. எனவே ஆண்டுதோறும் கனத்த மழை இருக்கும். இக்காப்பகத்தின் முதல் மைய மண்டலம் அலெக்சாண்டர் நதிக்கும் செங்கரப்பா வளைகுடாவுக்கும் இடையே உள்ளது. இக்காப்பகத்தில் இரண்டு முக்கிய இந்தியாவின் தேசியப் பூங்காக்கள் உள்ளடங்கியுள்ளன. அவை 1992 இல் அறிவிக்கப்பட்ட கேம்ப்பெல் குடா தேசியப் பூங்கா மற்றும் கேலாதீய தேசியப் பூங்கா ஆகியனவாகும். இவை தவிர உயிர்க்கோளப் பகுதியல்லாத விவசாய நிலங்களும் குடியிருப்புகளும் இங்குள்ளன. இந்தோ- மலாயா சூழலியலில் மண்டலத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல அகன்ற இலைக்காடுகள் உள்ளதால் உலக இயற்கைப் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் மையமண்டலம் சஹினி மற்றும் ஆன்ட்டி மலைகளுக்கிடையே அமைந்துள்ளது. தாவரங்கள்மகா நிக்கோபர் உயிர்க்கோளக் காப்பகம் உயர் பல்லுயிர் வளம் மிக்கதாகும். வெப்ப மண்டல பசுமைமாறா காடுகள், ஈரப்பதமான இலையுதிர் காடுகள் சதுப்புநிலக் காடுகள், போன்ற வகை காடுகள் இங்கு காணப்படுகிறது. தனித்தன்மை வாய்ந்த பல்வேறு தாவரயினங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகிறது. இங்கு காணப்படும் 2,200 தாவரயினங்களில் 200 வகை தாவரங்கள் இத்தீவுகளுக்கே உரித்தானவையாகும். வெப்பமண்டல மழைக்காடுகளைக் கொண்டுள்ள இக்காப்பகத்தில் சையாத்தியா, மரப்பெரணி, ஃபேலிநாப்சிஸ் ஆர்க்கிட், ருத்ராட்சம், புன்னை, உப்புப்பாலை, கண்டல், சிலைவாகை, தாழை, மருது மற்றும் சவுக்கு இன தாவரங்கள் மிகுந்து காணப்படுகின்றன.[2] அந்தமானில் 11,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் நிக்கோபாரில் சுமார் 270 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் பவழப்பாறைகள் சூழ்ந்து காணப்படுகிறது விலங்கினங்கள்14 வ்கையான பாலூட்டி இனங்கள், 71 வகையான பறவையினங்கள், 26 வகையான ஊர்வன 10 வகையான இருவாழ்விகள், 113 மீனினங்கள் ஆகியன இங்கு காணப்படுகின்றன. இவை இத்தீவிற்கே உரிய உயிரினங்களாக கண்டறியப்பட்டுள்ளன. 112 வகையான பறவையினங்கள், அந்தமான் உடும்பு, பெரிய கொள்ளைக்கார நண்டு, 4 வகையான ஆமைகள், காட்டுப்பன்றி, அந்தமான் பல்லி, விஷமற்ற அந்தமான் தண்ணீர் பாம்பு போன்ற விலங்கினங்கள் இத்தீவுகளில் வாழ்கின்றன. நண்டுத்திண்ணிகுரங்கு, கடலாமை, மலேயாபெட்டி ஆமை, போன்ற இக்காப்பகத்திற்கே உரித்த விலங்கினங்களும் அந்தமான் காட்டுப்பன்றி, பழந்திண்ணி வெளவால், சமுத்திரகழுகு, நிக்கோபார் கிளி மற்றும் உடும்பு போன்ற விலங்கினங்களும் காணப்படுகின்றன. பெரிய அலகையுடைய காடுகளில் வாழும் நார்கோடம் மலைமொங்கன் பறவை நார்கோடம் என்னுமிடத்தில் மட்டுமே காணப்படுகிறது. மெகாபோடு மற்றும் கொலக்கேலியா (உணவாகும் கூட்டை உருவாக்கும் பறவை) போன்ற அழியும் தருவாயிலுள்ள இனங்களுக்கு உறைவிடமாக இக்காப்பகம் உள்ளது. பழங்குடியினர்மங்கோலாயிடு ஷாம்ஃபென்கள், நிக்கோபரிஸ் ஆகிய பழங்குடியினர் இங்கு வாழ்கின்றனர்.[2] அச்சுறுத்தல்வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம், 1972ன் பகுதி 65ன் கீழ் உரிமைபெற்ற ஷாம்ஃபென் இனத்தினர் 200 பேரும் மற்றும் நிக்கோபாரிஸ் பழங்குடியின மக்கள் 300 பேரும் இக்காப்பாகத்தை சுற்றி வாழ்ந்து வருகின்றனர்.[2] இவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதாலும் வனப்பொருட்களை சேகரிப்பதாலும் இக்காப்பகம், பெரிதும் பாதிக்கப்படுகிறது. வேட்டையாடுவதால் அந்தமான் காட்டுபன்றியின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடல்வெள்ளரி, கொலக்கேலியாவின் கூடு, முதலைகள் மற்றும் ஆமைகள் போன்றவை அதிகமாக சட்டத்திற்கு புறம்பாக ஏறறுமதி செய்யப்படுவதும் அச்சுறுத்தல்களாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia