மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம்
மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited (MCL) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிலக்கரி வெட்டு எடுக்கும் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனம் ஆகும். இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் எட்டு துணை நிறுவனங்களில், மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் ஒன்றாகும். இதன் தலைமையகம் ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் நகரத்தில் உள்ளது. 1992ல் நிறுவப்பட்ட, மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம், மேற்கு ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, சத்தீஸ்கர் - ஒடிசா மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் உள்ள சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி மேற்கொள்கிறது.[1][2][3] மகாநதி நிலக்கரி நிறுவனம் ஏழு திறந்த வெளி சுரங்கங்களையும், மூன்று நிலத்தடி சுரங்கங்களையும், 22,259 ஊழியர்களையும் கொண்டுள்ளது.[3][4] 45 இடங்களில் சுரங்கம் தோண்டும் பணிக்கு, இந்திய அரசின் அனுமதி பெற்றுள்ள இந்நிறுவனம் நாளொன்றுக்கு 190.83 மெட்ரிக் டன் நிலக்கரி தோண்டி எடுக்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், சிறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia