மண்ணின் அமில காரத்தன்மை (Soil pH) என்பது மண்ணின் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையை அளந்தறிய உதவும் ஒரு வகை அளவீட்டென் ஆகும். மண்ணின் அமில காரத்தன்மை என்பது மண்ணின் பண்புகளை பண்பினடிப்படையிலும் அளவினடிப்படையிலும் தகவல்களைப் பெறுவதற்கான ஒரு வழிகாட்டும் அளவீடாகும்.[1]காரகாடித்தன்மைச் சுட்டெண் என்பது ஒரு நீர்க்கரைசலின்ஐதரோனியம் அயனிகள் அல்லது (H+ அயனிகளின் அல்லது H 3O+ aq) அயனிகளின் செறிவினது பத்தடிமான எதிர் மடக்கை என வரையறுக்கப்படுகிறது. மண் வகைகளில், இந்த அமில காரத்தன்மையானது நீருடன் கலந்த மண் கரைசலைக் கொண்டு அளந்தறியப்படுகிறது. (அல்லது உப்புக்கரைசலாக, உதாரணமாக 0.01 மோலார் CaCl 2), பொதுவாக இந்த மதிப்பானது 3-இற்கும் 10-இற்கும் இடைப்பட்ட மதிப்புகளைக் கொண்டுள்ளது. இதில் நடுநிலைத்தன்மையானது 7 என்ற மதிப்பைக் கொண்டுள்ளது. அமில வகை மண்ணானது அமிலகாரத்தன்மைச் சுட்டெண் 7-இற்குக் குறைவாக இருக்கும். காரத்தன்மை உடைய மண்ணின் அமில காரத்தன்மைச் சுட்டெண் 7-ஐ விட அதிகமாக இருக்கும். மீ அமிலத்தன்மை மண் என்பதன் அமிலகாரசுட்டெண் (pH < 3.5) என்ற மதிப்பைப் பெற்றிருக்கும். மீ காரத்தன்மையுள்ள மண்கள் (pH > 9) என்ற மதிப்பைப் பெற்றிருக்கும்.[2][3]
மண்ணின் pH ஆனது மண்ணில் முதன்மை மாறியாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது பல வேதிச்செயல்முறைகளை பாதிக்கிறது. வெவ்வேறு ஊட்டச்சத்துக்களின் வேதி வடிவங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், அவை மேற்கொள்ளப்படும் வேதிவினைகளில் செல்வாக்கு செலுத்துவதன் மூலமும் இது தாவரங்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை குறிப்பாகப் பாதிக்கிறது. பெரும்பாலான தாவரங்களுக்கு உகந்த pH வரம்பு 5.5 முதல் 7.5 வரை இருக்கும்;[3] இருப்பினும், பல தாவரங்கள் இந்த வரம்பிற்கு வெளியேயான அமில காரத்தன்மை மதிப்பில் செழித்து வளரத் தம்மைத் தகவமைத்துக் கொண்டுள்ளன.