மதுராந்தகம் தொடருந்து நிலையம்
மதுராந்தகம் தொடருந்து நிலையம் (Maduranthakam railway station, நிலையக் குறியீடு:MMK) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் என்னும் ஊரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. சென்னை சென்ட்ரல் இரயில்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய இரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று மற்றும் விரைவு இரயில் மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து என இரண்டையும் கையாள்கிறது. இந்த இரயில் நிலையம் தென்னிந்தியாவின் பல பகுதிகளான சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம், புதுச்சேரி, திருவனந்தபுரம் போன்ற இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகள் மற்றும் உள்ளூர் இரயில்களும் இந்த இரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சில விரைவு ரயில்கள் மட்டுமே இங்கே நிறுத்தப்படுகின்றன. அனைத்து விரைவு ரயில்கள் 10 கி.மீ (6.2 மைல்) தொலைவில் உள்ள மேல்மருவத்தூர் இரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. இது மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்டதாகும்.[2][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia