மனைவியை சுமக்கும் போட்டிமனைவியை சுமத்தல் ( Wife carrying ) என்பது ஒரு வகை போட்டியாகும். இதில் ஆண் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனது பெண் துணையை சுமந்து கொண்டு பந்தயத்தில் ஓடுகிறார்கள். பெண்ணை தடைகள் நிறைந்த பாதையில் ஆண்கள் பெண்களை அதிவேக நேரத்தில் கொண்டு செல்வதே விளையாட்டின் குறிக்கோள். இந்த விளையாட்டு முதலில் பின்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] பல வகையான சுமந்து செல்லும் நடைமுறைகளும் இதில் பின்பற்றப்படும்: பாரம்பரியமாக முதுகில் சுமந்து செல்லுதல், தோள்பட்டைக்கு மேல் சுமந்து செல்லுதல் தலைகீழாக தனது மனைவி அல்லது இணையை தலைகீழாக தனது முதுகில் செல்லுதல் போன்றவை. ஆத்திரேலியா, அமெரிக்கா, ஆங்காங், இந்தியா, செருமனி, இங்கிலாந்து மற்றும் பின்லாந்து மற்றும் அருகிலுள்ள சுவீடன், எசுத்தோனியா மற்றும் லாத்வியா உட்பட உலகின் பிற பகுதிகளில் மனைவியை சுமக்கும் போட்டிகள் நடந்துள்ளன. மேலும் இந்த விளையாட்டு கின்னஸ் உலக சாதனைகளிலும் ஒரு வகையைப் பெற்றுள்ளது.[2] [3] [4] விதிகள்ஆரம்பத்தில் அசல் பாதையானது வேலிகள் மற்றும் ஓடைகள் கொண்ட கரடுமுரடான, பாறை நிலப்பரப்பாக இருந்தது. ஆனால் அது நவீன நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது. இப்போது முழு பாறைகள், வேலிகள் மற்றும் தண்ணீரால் நிரப்பப்பட்ட குளம் போன்ற சில வகையான பகுதிகளுக்கு பதிலாக மணல் உள்ளது. இவை சர்வதேச மனைவியை சுமக்கும் போட்டி விதிகள் குழுவால் அமைக்கப்பட்ட பின்வரும் விதிகள்:
அனைத்து போட்டிகளுக்கும் சர்வதேச விதிகள் அடிப்படையாக இருந்தாலும், ஒவ்வொரு போட்டிக்கும் விதிகள் மற்றும் பரிசுகள் மாறுபடும். மனைவியை சுமக்கும் உலக வாகையாளர் போட்டிகள் 1992 முதல் ஆண்டுதோறும் பின்லாந்தில் (இங்கு பரிசு என்பது பீரில் மனைவியின் எடைக்கு ஈடாக பியர் வழங்கப்படுகிறது ). [5] [6] இந்தியாசுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஒரு சமூகமான ஈகோரன் இன்டியா என்ற அமைப்பு, 1 ஜனவரி 2011 அன்று இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள, திருவனந்தபுரத்தில் மனைவியை சுமக்கும் போட்டியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வு “பார்யாசமேதம்” என்று உள்ளூர் மொழியான மலையாளத்தில் தோராயமாக 'உங்கள் மனைவியுடன்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த சங்கம் திட்டமிட்டுள்ளது. ஆசியாவில் மனைவியை சுமப்பது “மட்டுகினினா” என்றும் அழைக்கப்படுகிறது. தம் லெகா கே ஐசா என்ற பாலிவுட் திரைப்படத்தில் மனைவியை சுமக்கும் பந்தயம் இடம் பெற்றிருந்தது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia