மருதோன்றி
![]() ![]() மருதோன்றி (மருதாணி, Lawsonia inermis) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய சிறு மரம் அல்லது புதர் ஆகும். பெயர்கள்இதற்கு அழவணம், மருதாணி, மருதோன்றி ஆகிய பெயர்கள் உண்டு. அழகை வழங்குவதால், ‘ஐ’வணம் (ஐ-அழகு) என்ற பெயரும் இதற்கு உண்டு. குளிர்ச்சியைக் கொடுப்பதாலும் இது, ஐவணம் (ஐ-கபம்) என்று அழைக்கப்பட்டிருக்கலாம். பாதங்களுக்குப் பயன்படுவதால், சரணம் (சரணம்-பாதம்) என்ற பெயரும் உள்ளது.[1] விளக்கம்இத்தாவரம் ஒரு சிறு மர வகையினைச் சார்ந்தது. இருப்பினும், 5,6 அடி உயரம் வரை வளரும் இயல்புடையது. இச்செடியின் இலைகள் புதர்போல அடர்ந்து காணப்படும். இதன் இலைகள், நீளத்தில் ஏறத்தாழ ஒரு அங்குல அளவுக்குள் இருக்கும். அகலத்தில் அரை அங்குல அளவு இருக்கும். இலை அம்பு வடிவமானது. எனவே, இலை நுனிகூராக இருக்கும். இளஇலையின் நிறம், வெளிர்பச்சையாகவும், முதிர் இலை சற்று அடர்பச்சையாகவும் இருக்கும். இதன் மணமுடைய மலர்கள், வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். பயன்கள்
காட்சியகம்
மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia