மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம்
மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் (மலாய்:Pusat Perubatan Universiti Malaya (PPUM); ஆங்கிலம்:University of Malaya Medical Centre) (UMMC) என்பது மலேசியா, கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையம் ஆகும். முன்பு பல்கலைக்கழக மருத்துவமனை (University Hospital) (UH) என்று அழைக்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு மலேசிய அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது. இது ஒரு பயிற்சி மருத்துவமனை மற்றும் நிபுணத்துவ மருத்துவமனை ஆகும். கோலாலம்பூரின் தென்மேற்குப் பகுதியில் பந்தாய் டாலாம் எனும் இடத்தில் உள்ளது. செப்டம்பர் 1962-இல் மலாயா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது. தற்போது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணத்துவ மருத்துவர்கள், பயிற்சிகளைப் பெறுவதற்கு இந்த மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. பொதுஇந்த மருத்துவமனை, மலாயா பல்கலைக்கழக மருத்துவத் துறைக்கான பயிற்சி மருத்துவமனையாகச் செயல்படுகிறது. மேலும் இது மலேசியாவின் மிகப்பெரிய; பழைமையான கற்பித்தல் மருத்துவமனை; மற்றும் மலேசியாவின் இரண்டாவது பெரிய மருத்துவமனையாகும்.[3] மலாயா பல்கலைக்கழகம் 1949-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி சிங்கப்பூரில் நிறுவப்பட்டது. மலாயா மற்றும் சிங்கப்பூர் கூட்டமைப்பு ஆகியவற்றின் உயர் கல்வித் தேவைகளுக்கு சேவை செய்வதற்காக ஒரு தேசிய நிறுவனமாக மலாயா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. ஏழாம் எட்வர்ட் மருத்துவக் கல்லூரிமலாயா பல்கலைக்கழகத்தின் முன்னோடிப் பல்கலைக்கழகமான மன்னர் ஏழாம் எட்வர்ட் மருத்துவக் கல்லூரி, 28 செப்டம்பர் 1905 அன்று சிங்கப்பூரில் நிறுவப்பட்டது. அப்போது சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. அக்டோபர் 1949-இல், மன்னர் ஏழாம் எட்வர்ட் மருத்துவக் கல்லூரியும்; ராபிள்ஸ் கல்லூரியும் இணைக்கப்பட்டதும், புதிய பல்கலைக்கழகமாக மலாயா பல்கலைக்கழகம் உருவானது. 15 சனவரி 1959-இல் மலாயா பல்கலைக்கழகத்தின் இரண்டு தன்னாட்சி பிரிவுகள்; ஒன்று சிங்கப்பூரிலும் மற்றொன்று கோலாலம்பூரிலும் அமைக்கப்பட்டன. செவிலியர் பற்றாக்குறை1960-ஆம் ஆண்டில், இந்த இரண்டு பிரிவுகளும் தன்னாட்சி மற்றும் தனி தேசியப் பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் கருதியது.[4] 1961-ஆம் ஆண்டு மலேசிய அரசியலமைப்பின் கீழ், 1962 சன்வரி 1-ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. 2012-ஆம் ஆண்டில், மலேசிய உயர்க் கல்வி அமைச்சினால் மலாயா பல்கலைக்கழகத்திற்குத் தன்னாளுமைத் தகுதி வழங்கப்பட்டது.[5] 1966 டிசம்பரில் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையின் முதன்மைக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆயினும், செவிலியர் பற்றாக்குறையால் மருத்துவமனையை முறையாக இயக்குவதும்; புதிய நோயாளிகள் கூடங்களைத் திறப்பதும் மெதுவாகத் தொடர்ந்தன. முதல் நோயாளிகள் மார்ச் 1967-இல் அனுமதிக்கப்பட்டனர்.[6] டாக்டர் டி.ஜே. தனராஜ்1968 ஆகஸ்ட் 5-இல் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை என்பது மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் என பெயர் மாற்றம் கண்டது.[7] 1969-ஆம் ஆண்டின் இறுதியில், மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் 758 படுக்கைகள் இருந்தன. 1974-இல், மேலும் 112 படுக்கைகளைக் கொண்ட புதிய நோயாளிக் கூடம் (வார்டு) கட்டப்பட்டது. அந்தக் கட்டத்தில் பல்கலைக்கழக மருத்துவமனையில் மொத்தம் 870 படுக்கைகள் இருந்தன. தற்போது இந்த மருத்துவ மையத்தில் 44 நோயாளி கூடங்களும்; 1,617 படுக்கைகளும் உள்ளன. 1 பிப்ரவரி 1963 அன்று டாக்டர் டி.ஜே. தனராஜ் என்பவர் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார். தற்போது பேராசிரியர் டாக்டர் நசிரா பிந்தி அசுனான் (2 நவம்பர் 2020 ~ 2024) இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார். தற்போதைய மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம்; மலேசிய உயர் கல்வி அமைச்சின் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக இயங்கி வருகிறது. காட்சியகம்
மேலும் காண்க* மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல் மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia