மாதவிடாய் நோய்க்குறி
மாதவிடாய் நோய்க்குறி ( பி.எம்.எஸ் ) என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய்க்காலத்தில் ஒன்று முதல் இரண்டு வாரங்களில் ஏற்படும் உடல் மற்றும் உணர்வு ரீதியான நோய் உணர்க்குறியைக் குறிக்கிறது. இதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் பெண்களுக்கிடையே வேறுபடுகின்றன. இரத்தப்போக்குத் தொடங்கியவுடன் இந்த அறிகுறிகள் முடிவடைந்து விடுகின்றன. பொதுவான அறிகுறிகளாக முகப்பரு, மென்மையான மார்பகங்கள், வீக்கம், சோர்வாக இருப்பது, எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவை ஏற்படும். பெரும்பாலும் இந்த அறிகுறிகள் ஆறு நாட்களுக்கு இருக்கும். ஒரு பெண்ணின் அறிகுறிகளின் காலப்போக்கில் மாறக்கூடும். கர்ப்ப காலத்தில் அல்லது மாதவிடாய் நிறுத்தத்தைத் தொடர்ந்து இத்தகைய அறிகுறிகள் ஏற்படாது.[1] சாதாரண வாழ்க்கையில் கருமுட்டை வெளிப்படுதலுக்குப் பின்னரும், மாதவிடாய்க்கு முன்னரும் ஓர் நிலையான உணர்ச்சி மற்றும் உடல் அறிகுறிகள் நோயறிதலுக்குத் தேவைப்படுகிறது. மாதவிடாய்ச் சுழற்சியின் ஆரம்பத்தில் இத்தகைய உணர்ச்சி அறிகுறிகள் இருக்கக்கூடாது. சில மாதங்களில் தினசரி அறிகுறிகளின் பட்டியல் நோயறிதலுக்கு உதவக்கூடும்.[3] நோயறிதல் செய்யப்படுவதற்கு முன்னர் இதே போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் பிற கோளாறுகள் விலக்கப்பட வேண்டும். மாதவிடாய் நோய்க்குறிக்கான காரணம் தெரியவில்லை.[1] அதிக உப்பு உணவு, ஆல்கஹால் அல்லது காஃபின் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதன் மூல சில அறிகுறிகள் தீவிரமடையக்கூடும். அடிப்படை வழிமுறை ஹார்மோன் அளவுகளில் மாற்றங்களை உள்ளடக்கியதாக நம்பப்படுகிறது. பொதுவாக லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு, அதிக உடற்பயிற்சியுடன் உப்பு, காஃபின் அளவைக் குறைத்தல், மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியன பரிந்துரைக்கப்படுகிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றைக் கூடுதலாக எடுத்துக்கொள்ளுதல் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.[2] நாப்ராக்ஸன் போன்ற அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் உடல் அறிகுறிகளுக்கு உதவக்கூடும். மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு கருத்தடை மாத்திரைகள் அல்லது டையூரிடிக் ஸ்பைரோனோலாக்டோன் பயனுள்ளதாக இருக்கும். 80% பெண்கள் வரை மாதவிடாய்க்கு முன்னர் சில அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். மாதவிடாய் நிறுத்த நிலையில் உள்ள பெண்களுக்கு 20 முதல் 30% பெண்களுக்கு மாதவிடாய் நோய்க்குறிக்கான அறிகுறிகள் உள்ளன.[2] மாதவிடாய் மன அழுத்தக் கோளாறு (பி.எம்.டி.டி) என்பது மாதவிடாய் நோய்க்குறியின் மிகவும் கடுமையான வடிவமாகும், இது அதிக உளவியல் அறிகுறிகளைக் கொண்டுள்ளது.[1] மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மூன்று முதல் எட்டு சதவீதம் மாதவிடாய் மன அழுத்தக் கோளாறு பாதிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட செரட்டோனின் தடுப்பு மருந்துகளை மீன்டும் எடுத்துக்கொள்ளுதல்,மன அழுத்த நீக்க மருந்துகள் உட்கொள்ளுதல் ஆகியவை மாதவிடாய் மன அழுத்தக் கோளாறின் வழக்கமான நடவடிக்கைகளுக்குக் கூடுதலாகப் பயன்படுத்தப்படலாம். அறிகுறிகள்200 க்கும் மேற்பட்ட வெவ்வேறு உணர்வு அறிகுறிகள் மாதவிடாய் நோய்க்குறியுடன் தொடர்புடையவை. மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை, தலைவலி, சோர்வாக உணர்தல், நிலையற்ற மனநிலை, அதிகரித்த உணர்ச்சிவயப்படுதல், உணர்திறன் மற்றும் உடலுறவில் ஆர்வத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை பொதுவான உணர்ச்சி மற்றும் நோய் உணர்குறிகள்ஆகும்.[4] மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடைய உடல் அறிகுறிகளில் வீக்கம், குறைந்த முதுகுவலி, வயிற்றுப் பிடிப்புகள், மலச்சிக்கல் / வயிற்றுப்போக்கு, மார்பகங்களில் வீக்கம் அல்லது மென்மை, முகப்பரு, மூட்டு அல்லது தசை வலி மற்றும் பசி ஆகியவை அடங்கும்.[5] சரியான அறிகுறிகளும் அவற்றின் தீவிரமும் ஒரு பெண்ணிலிருந்து மற்றொரு பெண்ணுக்குக் கணிசமாக வேறுபடுகின்றன, மேலும் ஒரு மாதவிடாய்ச் சுழற்சியில் இருந்து மற்றொரு மாதவிடாய்ச் சுழற்சிக்கும் கூட காலப்போக்கில் ஓரளவு வேறுபாடுகள் ஏற்படுகின்றன.[2] மாதவிடாய் முன் நோய்க்குறி உள்ள பெரும்பாலான பெண்கள், சாத்தியமான அறிகுறிகளில் அதாவது ஒப்பீட்டளவில் கணிக்கக்கூடிய வடிவத்தில் சிலவற்றை மட்டுமே அனுபவிக்கிறார்கள், .[6] மாதவிடாய் மனநோய் பொதுவாக மாதவிடாய்க்கும் முன் அல்லது மாதவிடாயின் பொழுதும் ஏற்படுகிறது. மாதவிடாய் மனநோய் அறிகுறிகளில் குழப்பம் அல்லது மாயத்தோற்றம், பேசாதிருத்தல், மதிமயக்க நிலை, மருட்சி, அல்லது பித்து நிலை ஆகியவை அடங்கும்.[7] மாதவிடாய் மன அழுத்தக் கோளாறு என்பது மாதவிடாய் நோய்க்குறியின் கடுமையான வடிவம் ஆகும். மாதவிடாய்க் கால நிலையில் உள்ள பெண்களில் 3–8% பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia