மாந்தர் தாமாகப் பற்றி எரிதல்உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் எரிந்து சாம்பலாகிவிடுவதாக நம்பப்படும் நிகழ்வை மாந்தர் தாமாகப் பற்றி எரிதல் (Spontaneous Human Combustion) என்பர். வரலாற்றில் கடந்த 300 ஆண்டுகளில் 200 நிகழ்வுகள் இவ்வாறானவை என்று சுட்டப்பட்டாலும்,[1] அவற்றில் பெரும்பாலானவை செவிவழிச் செய்திகளாகவும், முறையாகத் துப்புத்துலக்காதவைகளாகவுமே இருந்துள்ளன. படங்கள் பதிவாகியுள்ள சில நிகழ்வுகளில் சிகரெட்டைப் போன்ற ஏதாவது ஒரு தீ மூட்டி இருந்துள்ளது. பல ஆண்டுகளாக அறுதியிடப்படாத இந்நிகழ்வுகளுக்கான அறிவியல் விளக்கமொன்றை 1998-ம் ஆண்டு பிபிசி நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று காட்டியது.[2] நெருடும் பண்புகள்தாமாக எரிந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வுகளில் பின்வரும் பொதுவான பண்புகள் போதிய விளக்கம் இல்லாமல் நெருடுவதாக இருந்தன.[3]
கருதுகோள்கள்இத்தகைய நிகழ்வுகளுக்கான காரணங்களாகப் பொதுவாக முன்வைக்கப்படும் கருதுகோள்கள் மூன்று வகையின.
தாமாகப் பற்றிக் கொள்வதற்குத் தேவையான சூழல்![]()
ஆனால், சிலர் முன்வைத்தது போல குடலில் இருக்கும் மீத்தேன் பற்றிக் கொண்டால் உள்ளுறுப்புகள் தாம் மிகுதியாகச் சிதைய வேண்டும். ஆனால், பல வேளைகளில் வெளியுறுப்புகளே மிகுதியாக எரிந்துள்ளன. கனலினால் பற்றி இயல்பாக எரியும் சூழல்
மாந்தர் தாமாகப் பற்றி எரியும் நிகழ்வுகளுக்கான அறிவியல் விளக்கத்தில் சிகரெட்டே பெரும்பாலும் தீமூட்டியாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. மாரடைப்பு போன்ற இயற்கையான காரணத்தால் இறந்து விட்ட ஒரு நபர் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டு நழுவி உடை மேல் விழக்கூடும். இதனால் அவர் உடுத்தியிருக்கும் உடையில் நெருப்புப் பற்றிக் கொள்ளலாம்.[4] சிகரெட்டு குறைந்த வெப்பத்தில் எரிவதால் பெருந்தீ எதையும் ஏற்படுத்தாது, மாறாக உடையிலும் மேற்தோலிலும் சுட்டு விடும். பெருந்தீ ஏற்படாமையால் அருகிலுள்ள பொருட்கள் பற்றிக் கொள்வதில்லை. அதே வேளையில், திரி விளைவு என்ற ஒன்று ஏற்படுகிறது. மெழுகுதிரியில் வெளிப்புறத்தில் மெழுகும் உட்புறம் திரியும் இருக்கும். அதற்கு மாறாக, இங்கு, மனித உடலில் தோலுக்கடியில் இருக்கும் கொழுப்பு எரிபொருளாகவும், உடையும் மேற்தோலும் திரியாகவும் செயல்படுகிறது. சிகரெட்டின் வெப்பம் தோலைத் துளைத்து, கொழுப்பை இளக்கிவிடுகிறது. பின் திரி விளைவினால் நெருப்பு பற்றி மெழுகுத்திரி போலவே சிறிய கனலுடன் மெதுவாக உடல் முழுவதும் எரிகிறது. இக்கருதுகோளை பன்றியின் உடலைக் கொண்டு ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.[5][6] இவ்விளைவினால் ஏற்படும் காயத்தை ஒத்த ஒன்று ஒரு நிகழ்வில் பதிவாகியுள்ளது.[7] உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லைவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பரஸ்கனி கிராமத்தைச் சேர்ந்த குழந்தை உடலில் திடீரென தீப்பற்றுவது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனகள் செய்தனர். குழந்தையின் உடலில் இருந்து ரத்தம், சிறுநீர், மற்றும் தோல் ஆகியவற்றில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குழந்தையின் ஆய்வு முடிவுகளில் எந்த வித பிரச்னைகளும் இல்லை, குழந்தைக்கு உடலில் தானாக தீப்பற்றிக் கொள்ளும் அதிசய நோய் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.[8] [9][10] புனைவில் இந்நிகழ்வு![]() பத்தொன்பதாம் நூற்றாண்டு தொட்டே பல புனைவு ஆக்கங்களில் மாந்தர் தாமாகப் பற்றி எரிதல் இடம்பெற்றுள்ளது. 1798-ம் ஆண்டு சார்லசு புரோக்குடன் பிரவுன் எழுதிய வீலேண்டு என்ற புதினத்தில் முதன்மைக் கதை மாந்தன் செருமனியில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறுவான். அவனது, சமய நம்பிக்கைக்கேற்ப ஒரு கோவிலில் பல மணி நேரம் தனியாக இருப்பான். ஓரிரவில் அவனது குடும்பத்தார் பலத்த ஓசையொன்றைக் கேட்டு ஓடிச் சென்று பார்க்கையில் அவன் தனது உடைகள் எரிந்த நிலையில் பித்துப் பிடித்தது போலக் கிடப்பான். பிறகு இறந்தும் விடுவான். அந்தப் புதினம் வெளிவந்தபோது இத்தகைய நிகழ்வுகளுக்கு எந்தவொரு பெயரும் இல்லாவிட்டாலும் பிரவுனின் ஒரு அடிக்குறிப்பு இத்தகைய நிகழ்வுகள் பதினெட்டாம் நூற்றாண்டு மருத்துவ ஆய்வுகளில் அறியப்பட்டிருந்ததைக் காட்டுகிறது.
உருசிய எழுத்தாளர் நிக்கோலாய் கோகால் இத்தகைய நிகழ்வுகளைத் தனது மூன்று ஆக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.[11] புகழ் பெற்ற எழுத்தாளர் சார்லசு டிக்கன்சு 1852-ம் ஆண்டு வெளியிட்ட நல்வாய்ப்பற்ற வீடு (Bleak House) என்ற புதினத்தில் ஒரு கடைக்காரர் தாமாகப் பற்றி எரிவதை மிக விளக்கமாக எழுதியுள்ளார். அந்த நாட்களில் இவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பில்லை என்று மக்கள் நம்பி வந்த நிலையில் டிக்கன்சைப் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதியதும் மக்கள் இவற்றை நம்பத் தொடங்கியதற்கு ஒரு காரணமாக இருந்தது.[2] யூலுசு வெருனே 1878-ல் வெளியிட்ட தனது புதினமொன்றில் ஒரு மன்னர் நெருப்புடன் தரப்பட்ட சாராயப் பழச்சாறை உட்கொண்டவுடன் பெட்ரோலை ஊற்றி எரிவது போல எரிந்து விட்டார் என்று எழுதியுள்ளார்.[12] அண்மைய தொலைக்காட்சித் தொடரான த எக்சு ஃபைல்சு, X என்ற மாங்கா தொடரிலும் இந்நிகழ்வுகள் காட்டப்பட்டுள்ளன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia