மாழைப் பிணைப்பு

துத்தநாகம் போன்ற உலோகங்களில் மாழைப் பிணைப்பைக் காணலாம்.

மாழைப் பிணைப்பு (Metallic bond, உலோகப் பிணைப்பு) மாழைகளில் கார எதிர்வினை விசைகள் எனப்படும் மூலக்கூறுகளுக்கிடையே நிலவும் வேதிவினை ஆகும். தங்கள் இருப்பிடங்களிலிருந்து இடம் பெயர்ந்த இலத்திரன்களுக்கும் (கடத்தி இலத்திரன்கள்) நேர்மின்னேற்றம் பெற்ற மாழை அணுக்களுக்கும் இடையேயுள்ள நிலைமின் பிணைப்பாகும். இதனை அணிச்சட்டகத்தில் பொதிந்துள்ள மாழை அணுக்கள் அனைத்தும் பிணைக்கப்படாத இலத்திரன்களை பங்கீடு கொள்ளும் முறைமையாகவும் கருதப்படுகிறது. உருக்கிய உப்புக்களுடன் மாழைப் பிணைப்புகள் ஒப்பிடப்படுகின்றன.

இலத்திரன்களுக்கும் நேர்மின் அயனிகளுக்கும் உள்ள வலுவான கவர்ந்திழுக்கும் விசையால் மாழைகளின் உருகுநிலை அல்லது கொதிநிலைகள் மிகவும் உயர்வாக உள்ளன. இது அயனிப் பிணைப்புகளுக்கு ஒத்தது.

இந்த மாழைப் பிணைப்புக்களே உலோகங்களின் வலிமை தகடாகுந்தன்மை, நுண்கம்பியாகுந்தன்மை, மிளிர்வு, வெப்பக் கடத்தல் மற்றும் மின் கடத்தல் போன்ற பல இயற் பண்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளன.

நேர்மின் அயனிகளிடையே இலத்திரன்கள் தனித்து நகர முடிவதால் மாழைகளுக்கு மின்கடத்துத் திறன் உண்டாகிறது. இதே போன்றே வெப்பக் கடத்துத் திறனும், பிணைக்கப்படாத இலத்திரன்கள் தாம் பெற்ற ஆற்றலை விரைவாக எடுத்துச் செல்ல முடிவதால், சகப்பிணைப்பு கொண்ட பொருட்களை விட கூடுதலாக உள்ளது. மாழையல்லாத சில பொருட்களும் நல்ல கடத்திகளாக உள்ளன: காரீயம் (மாழைகளைப் போன்றே பிணைக்கப்படாத இலத்திரன்களைக் கொண்டுள்ளது) மற்றும் உருக்கிய நீர்மையான அயனிச் சேர்மங்கள் (இவற்றில் பிணைக்கப்படாத அயனிகள் கடத்துகின்றன) [1] [2] [3]

அடுத்துள்ள அணுக்களுடன் பகிர்ந்துகொள்ளாத ஒரு இணைதிறன் எதிர்மின்னியையாவது மாழை பிணைப்புகள் கொண்டுள்ளன. இலத்திரன்களை இழந்து அவை அயனிகளை உருவாக்குவதுமில்லை. மாறாக, மாழை அணுக்களின் வெளி ஆற்றல் நிலைகள் (அணுப் பரிதியங்கள்) ஒன்றின் மேல் ஒன்று பதிகின்றன. இவை சகப் பிணைப்புக்களைப் போன்றவை.[4] மாழைப் பிணைப்புகளை அனைத்து உலோகங்களும் காட்டுவதில்லை; காட்டாக பாதரச அயனிகள் (Hg2+
2
) மாழை-மாழை சகப் பிணைப்புக்களால் உருவாகின்றன.

கலப்புலோகம் என்பது உலோகங்களின் கரைசலாகும்.

பிற பக்கங்கள்

மேற்கோள்கள்

  1. http://www.chemguide.co.uk/atoms/bonding/metallic.html
  2. http://www.chemguide.co.uk/atoms/structures/metals.html
  3. http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/chemical/bond.html
  4. http://www.physics.ohio-state.edu/~aubrecht/physics133.html
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya