மிச்செல் பிளாட்டினி
மிசேல் பிரான்சுவா பிளாட்டினி (Michel François Platini, பிறப்பு: சூன் 21, 1955), பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த முன்னாள் காற்பந்து வீரர் மற்றும் மேலாளர் ஆவார். 2007-ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார். வரலாற்றின் மிகச்சிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர் ஃபிஃபா நூற்றாண்டின் சிறந்த வீரர் ஓட்டெடுப்பில் தனிச் சிறப்புச் சான்றாளர் குழுவின் ஓட்டெடுப்பில் ஆறாவது நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்; மேலும், ஃபிஃபா கனவு அணியின் அங்கத்தவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பாலோன் தி'ஓர் விருதை 1983, 1984 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை வென்றார்; அதிகபட்ச பாலோன் தி'ஓர் விருது பெற்ற சாதனையாக யோகன் கிரையொஃப், மார்க்கோ வான் பாஸ்டன் மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருடன் மூன்றுமுறை வென்றிருக்கிறார். (2012-ஆம் ஆண்டில் லியோனல் மெஸ்ஸி நான்காவது முறையாக இவ்விருதை வென்று புதிய சாதனை படைத்தார்). 2004-ஆம் ஆண்டில் ஃபிஃபா நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது பெலே அவர்களால் வாழ்ந்துகொண்டிருக்கும் மிகச்சிறந்த 125 காற்பந்து வீரர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia