மீனாட்சிபுரம் மதமாற்றம், 19811981 மீனாட்சிபுரம் மதமாற்றம் என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தின், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின், தேன்பொத்தை ஊராட்சியில் உள்ள தே. மீனாட்சிபுரம் கிராமத்தில், 1981ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான இந்து சமயத்தைச் சேர்ந்த தலித்துகள், சாதி பாகுபாடுகளை எதிர்த்து இஸ்லாம் சமயத்துக்கு மாறிய நிகழ்வாகும். இந்தச் சம்பவம் இந்தியாவில் மத சுதந்திரத்தின் மீது விவாதத்தைக் கிளப்பியது மற்றும் அரசு மதமாற்றச் சட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்தது.[1] சமய மாற்றம்மீனாட்சிபுரத்தில் வாழும் தலித் மக்கள், சாதி இந்துக்கள் பயன்படுத்தும் கோயில்கள் மற்றும் கிணறுகள் பொது இடங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாமல் பாரபட்சமாக நடத்தப்பட்டனர்.[2] மாவட்டத்தில் சாதி தொடர்பான வன்முறை என்பது ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டதாக இருந்தது. பாகுபாடு மற்றும் அரசியல் ஒடுக்குமுறையைத் தவிர்க்க, தலித்துகள் இஸ்லாமியத்தைத் தழுவ முடிவுச் செய்தனர்.[3] 1981 பெப்ரவரி 19 அன்று, 800 தலித்துகள் (300 குடும்பங்கள்) ஒரு சமய மாற்ற விழாவினால் தென்னிந்திய இஷாதுல் இஸ்லாமிய சபையினால் இஸ்லாமியத்துக்கு மாற்றப்பட்டனர்.[4] பின்விளைவுஇந்தச் சம்பவத்திற்கு பிறகு, தமிழ்நாடு அரசு சமய மாற்றம் குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக் ஆணையத்தை அமைத்தது. ஆணையம் அதன் அறிக்கையில் மாநில அரசு மதமாற்றத்துக்கு எதிராக ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என ஒரு ஆலோசனையை வழங்கியது, ஆனால் அரசு அதை நிறுத்தி வைத்துள்ளது.[5] இந்து அமைப்புகள் இந்த சமய மாற்றத்தில் வெளிநாட்டு நிதியின் மூலமாக நடந்தது என்று கூறினார். எனினும், மதம் மாறிய தலித்துகள் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.[6] தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல அமைப்பு இந்த சமய மாற்றமானது கட்டாய சமயமாற்றம் இல்லை என கூறியது. ஆரிய சமாஜம், விசுவ இந்து பரிசத், பாரதிய ஜனதா கட்சி போன்ற இந்து அரசியல் அமைப்புகள் மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் போன்ற தலைவர்கள் போன்றோர் இந்தக் கிராமத்துக்கு வந்து இசுலாம் மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் தாய் மதத்துக்கு மாற வேண்டினர். பின்னர் 1991இன் கணக்கெடுப்பின்படி மதம் மாறிய 80% பேர் மீண்டும் இந்து மதத்திற்கே திரும்பினர்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia