இந்த உடன்படிக்கையின் மேல் புறமும் கீழ் புறமும் கிடைக்கவில்லை. அதனால் அவ்வணிகர்களின் பெயரையும் அறிய முடியவில்லை. இதன் முன்பக்கத்தில் உடன்படிக்கை ஒப்புதலும் பின்பக்கத்தில் இவ்வுடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் எடை அளவைகளும் தரப்பட்டுள்ளது. அந்த கிரேக்க மொழி உடன்படிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு,
முன் பக்கம்
“
...தங்களது துணைத்தலைவர்கள்/பிரதிநிதிகள் அல்லது மேலாளர்கள் ... மற்றும் நாம் ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி தங்களது ஒட்டக ஓட்டுனருக்கு 170 டேலன்ட், 50 திரமம் அதிகப்படியான கோபடசு செல்லும் சாலையைப் பயன்படுத்தத் தருவேன் எனவும், நான் சுமைகளை எனது கண்கானிப்பில் பாலைவனம் வழியாக எடுத்துச்செல்வேன் எனவும், பொருட்களை சேதம் விளையாமல் கோபடசிலுள்ள சுங்கச்சாவடிக்கு கொண்டு வருவேன் எனவும், தாங்கள் அல்லது தங்கள் துணைத்தலைவர்கள் அல்லது அவர்களுடைய தற்போதைய முகவர் முடிவின் படி ஆற்றங்கரையில் இறக்கி பத்திரமாக வைப்பேன் எனவும், சரியான காலத்தில் படகில் பத்திரமாகக் கொண்டு செல்வேன் எனவும், அங்கிருந்து டெட்ரோலோசியா சுங்கச்சாவடி கிடங்கிற்கு எடுத்துச் செல்வேன் எனவும், தங்களது முடிவின் உரிமை மற்றும் முத்திரையின் படி அல்லது எவ்வாறாயின் தங்களது பதிவாளரின் முடிவின் படி அதே முறையில் எடுத்துச் செல்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். இப்போதிலிருந்து டெட்ரோலோசியா வரை செல்ல படகுக்கு ஆகும் அனைத்து செலவுகளும், பாலைவனத்தைக் கடக்க ஆகும் அனைத்து பயணச் செலவுகளும், படகு, படகோட்டி, உடன் வருபவர்கள் அனைவருக்குமான செலவுகளும்.... அதன்படி, முசிறியில் முடிவு செய்யப்பட்ட கடன் ரசீதின் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் வரும் போது நான் எனது கடனைச் சட்டப்பூர்வமாக திருப்பிச் செலுத்தாத நிலையில் தாங்கள் மற்றும் தங்களது உதவியாளர்கள் தாம் நினைத்தபடி முடிவெடுக்கவும், எல்லையற்ற விருப்பாற்றலுடன் தங்களுடைய முடிவெடுக்கும் இசைவுடன் நிறைவேற்றும் நடவடிக்கையில் முடிவு செய்யவும் சட்டப்பூர்வமான முடிவல்லாதும் தாங்கள் மேற்கூறிய கடனின் தலைவர் எனவும் செல்வத்தில் கால் பங்கைப் பறிமுதல் செய்யவும், தாங்கள் விருப்பப்படி முக்கால் பங்கை எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்க்கவும் விற்கவும் கடனைத் தாங்கள் விரும்பும் வண்ணம் ஒழுங்கு படுத்தவும் முதலீடுகளைத் தங்கள் விருப்புரிமைப்படி மேலாண்மை செய்யவும், சந்தை நிலவர விலையில் தங்களுக்கே விற்றுக் கொள்ளவும், பொருட்களை வைத்துக் கொள்ளவும், பெற்ற கடனை மேற்கூறிய கடனிலிருந்து எடுத்துக் கொள்ளவும் உறுதியளிக்கிறேன். தாங்கள் மற்றும் தங்கள் துணைத்தலைவர்கள் அல்லது பதிலாட்கள் பெற்றுக்கொள்வதற்குப் பொறுப்பாவார்கள் மற்றும் நாங்கள் ஒருவரை ஒருவர் எவ்வகையிலும் பொய் பேசி, குறை கூறிக் கொள்ளமாட்டோம். சமூகத்திற்காக அளிக்கப்படும் செலவின் இலாப நட்டங்கள் என்னையும், கடன் பெற்றவரையும் மற்றும் அடகு வைத்தவரையும் சாரும்.[3]
”
பின்பக்கம்
இதில் வடகங்கையிலிருந்து வந்த 60 பெட்டிகள் விலை ஒரு பெட்டிக்கு 45 வெள்ளி தாலந்து (டேலன்ட்) வீதம் 60க்கு 4500 திரமம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதில் காணப்படும் எடை மற்றும் பண அளவீடுகள்,
இந்த கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட 5,00,000 கிலோ செல்வத்தைக் கொண்டு தற்போதைய நைல் நதியைச் சுற்றியுள்ள 2400 ஏக்கர் பண்ணை நிலங்களை விலைக்கு வாங்கலாம் என்று காசன் என்ற பொருளியல் வல்லுநர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.[4] இன்னொரு ஆய்வாளாரான ஃபெடரிக்கோ ரோமானிசு என்றவர் இச்சரக்கின் மதிப்பு 68,000 ரோமானிய, எகிப்து தங்கக்காசுகளுக்கு சமம் எனத் தெரிவித்துள்ளார்.[4] ஒரு சரக்குப் பரிமாற்றத்தின் மதிப்பே இவ்வளவு நிலத்தின் மதிப்புக்கு ஈடாகும் என்றால் மொத்த வணிகர்களின் ஒட்டுமொத்தப் பரிமாற்றமும் எவ்வளவு மதிப்பு உடையதாய் இருக்கும் என்று நினைக்க வியப்பாய் உள்ளது என்பது காசன் கூற்று.[5]
முடிவுகள்
இதில் இவ்வணிகர்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை ஆயினும் செங்கடல் துறைமுகங்களில் நிகழ்ந்த அகழ்வாய்வில் கிடைத்த பானைஓடுகளில்கோற்பூமான், கணன், சாதன் போன்ற பழந்தமிழ் வணிகப்பெயர்கள் காணப்படுவதால் இந்த வணிகர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வுடன்படிக்கையில் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிகிறது.[6]