முதுகுத் தண்டுவட துளையிடுதல்
முதுகுத் தண்டுவட துளையிடுதல் (Lumbar puncture) நோயறிதலுக்காகவும் நோய் சிகிச்சைக்காகவும் செய்யப்படும் ஒரு மருத்துவ செயல்முறை. தண்டுவடத்தில் ஊசியின் மூலம் துளையிட்டு உள்ளிருக்கும் மூளைத் தண்டுவட நீரை எடுத்து அதிலிருக்கும் வேதிப்பொருட்கள் நுண்கிருமி உயிர் அணுக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய இந்தத் தண்டுவட துளையிடுதல் செயல் முறை பயன்படுகிறது. இந்நீர் அதிகரித்தால் மண்டையக அழுத்தம் (intracranial pressure) ஏற்படும். அவ்வழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் (சிகிச்சை) இச்செயல் முறை பயன்படுகிறது. இடுப்புப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் அதனை மரத்துப் போகச் செய்யும் மருந்துகளை ஏற்றுவதற்காகவும் இச்செயல்முறை பயன்படுகிறது. இத்தண்டுவட நீரில் ஆராய்வதன் மூலம் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மூளைத்தொற்று. மூளை வீக்கம் காயம் மூளை புற்று போன்றவற்றை அறியலாம். மூளைக் காய்ச்சல் நோயறிய முதன்மையாக பயன்படும் செயல்முறை இது. காரணி அறிய முடியா காய்ச்சலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் இதனை மருத்துவர்கள் செய்வர். மூளையின் உறையில் இரத்தக் கசிவு, அதிக நீர் சுரப்பு (hydrocephalus), தான்தோன்று மண்டையக இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களை கண்டறிய இச்செயல் முறை பயன்படுகிறது. தண்டுவட நீரிலிருக்கும் புற்றுக்கான அணுக்களைக் கொண்டு எவ்வகையான புற்று என்பதனையும் அறியலாம். தண்டுவட ஊசி மூலம் அறுவை சிகிச்சைக்கான மரத்துப் போகும் மருந்து செலுத்துவதைப் போலவே புற்றுநோய்க்கான கீமோதெரபியும் செலுத்துகிறார்கள். முரண்நோய்களும் பிற நிலைகளும்சில நோய்களுக்கும் அறிகுறிகளுக்கும் இச்செயல்முறையை மருத்துவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள்.
செயல்முறை![]() ![]() முதலில் நோயாளியை இடம் அல்லது வலப்பக்கமாக ஒருக்களித்து படுக்க வைக்கவேண்டும். கழுத்தை முன்பக்கமாக வளைக்க வேண்டும். பின் முழங்காலை மடித்தவாறு நெஞ்சு பகுதி்க்கு கொண்டு வரவேண்டும். அப்பொழுதுதான் முதுகுத்தண்டுவட எழும்புகளுக்கிடையே இடைவெளி கிடைக்கும். வயிற்றிலிருக்கும் கருவைப்போல வளைய வேண்டும். படுக்க முடியாத நோயாளிகள் உட்காரவைத்து முன்புறம் குனியவைத்து தோள்பட்டையை மற்றும் தலையை முன்புறம் வளைக்க வேண்டும். நோயாளியின் முதுகு மயிர் நீக்கம் செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில் இப்பொழுது அதில் மருத்துவர் மீண்டும் தொற்று நீக்கம் செய்து துளையிடும் பகுதியை விரல்களால் உணர்ந்து அதனைச்சுற்றி தோலுக்கடியில் மரத்துப்போக ஊசியின் மூலம் மருந்து செலுத்துவார். பின்பு தண்டுவடத்திற்கான ஊசியை தண்டுவடத்திற்குள் செலுத்துவார். அதாவது இடுப்பு எலும்பில் L3/L4, அல்லது L4/L5 பகுதியில் ஊசியை செலுத்துவர். ஊசி டுரா உறையைத் தாண்டி அரக்ணாய்டு உறையைத் தாண்ட வேண்டும். அதற்குப்பின் இருக்கும் வெளி உபஅரக்ணாய்டு வெளி ஆகும். இப்பொழுது ஊசிக்குள் இருக்கும் கம்பியை வெளியே எடுப்பார்கள். இப்பொழுது வரும் திரவத்தை தொற்று நீக்கிய கண்ணாடி குழாயில் சேகரிப்பார்கள். அழுத்தத்தைக் கணக்கிட அழுத்தமானி உபயோகித்துக் கண்டறிவார்கள். பிறகு ஊசிக்குள் மீண்டும் கம்பியை செலுத்தி ஊசியை வெளியே எடுப்பார்கள். எடுத்த வேகத்தில் குத்திய இடத்தில் அழுத்தம் கொடுத்து மருந்து இட்டு ஒட்டுவார்கள். பிறகு நோயாளி கட்டாயம் 6 மணி நேரத்திற்குப் படுத்திருக்க வேண்டும். நடக்கக் கூடாது. நரம்பியல் பிரச்சினைக்கான அறிகுறி ஏதாவது இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். வாந்தி மயக்கம் தலைவலி கண் மங்கல் போன்றவை இருக்கிறதா என்று கண்காணித்தல் அவசியம். திரவ அழுத்தம் கணக்கிடப்படும்பொழுது நோயாளியை தளர்வாக ஆசுவாசப்படுத்திக் கொள்ளச் சொல்ல வேண்டும். இல்லையேல் திரவ அழுத்தத்தில் மாற்றப் பிழை உண்டாகும். சிக்கலும் தீர்வும்இச்செயல்முறைக்குப் பின் தலைவலி குமட்டல் போன்றவை ஏற்படலாம். சிரை வழித் திரவம். வலி நீக்கி போன்றவைகளால் சரி செய்வர். நடக்காமல் 6 மணி நேரம் மல்லாந்த நிலையில் படுத்திருத்தலிலேயே பல பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia