முதுமைமுதுமை (Old age) என்பது மனிதர்களின் ஆயுட்காலம் நெருங்கி வருவதை அல்லது அடையக்கூடிய காலத்தைக் குறிக்கிறது இதனால் மனிதனின் முடிவு என்பது வாழ்க்கை வட்டம் என் அறிய முடிகிறது. பொதுவாக "வயதானவர்கள்" , "முதியவர்கள்" (உலகளாவிய பயன்பாடு), "மூத்தவர்கள்" (அமெரிக்க பயன்பாடு) , "மூத்த குடிமக்கள்" , (பிரித்தானிய மற்றும் அமெரிக்கன் பயன்பாடு) , "வயது வந்தவர்கள்" (சமூகம்)[1], மற்றும் "மூப்பர்கள்" (பல கலாச்சாரங்களில் - பழங்குடி மக்களின் கலாச்சாரங்கள் உட்பட) என்றெல்லாம் இவர்களை அழைப்பதுண்டு "முதியவர்கள்" பெரும்பாலும் குறைவான மீளுருவாக்கம் திறன்களை கொண்டிருக்கிறார்கள் , இளையவர்களை விட காயங்கள் மற்றும் நோய்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், கரிம செயல்முறைகள் முதுமையடைதல் என்பது உயிரியல் முதிர்ச்சி என்று அழைக்கப்படுகிறது,[2] முதுமையடைதல் மருத்துவ ஆய்வுகளின்படி மரபியல் ஆகும்,[3] வயதானவர்களைத் தொந்தரவு செய்யும் நோய்களின் ஆய்வு, "மூப்பியல் மருத்துவம்" என அழைக்கப்படுகிறது[4] அவர்கள் பணி ஓய்வு, தனிமையுணர்வு, தலைமுறை இடைவெளி போன்ற பல சமூகப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.[5] வயதானவர்கள் நிறைய நோய் அறிகுறிகளுடன் உள்ளனர். உதாரணமாக, சுகாதாரத்திற்கு ஆரோக்கியமான எலும்புகள் முக்கியமானவை. வயதான காலத்தில், நமது உடல் பழைய எலும்பு திசுக்களை உறிஞ்சத் தொடங்கி புதிய எலும்பு திசுக்களை உருவாக்கும் , அதே சமயம், எலும்புகள் மெல்லியதாகவும், பலவீனமாகவும் இருக்கும் , இது எலும்புப்புரை எனப்படும் ஒரு நிலையை உண்டாக்குகுகிறது. இதனால் எலும்புகள் மிகவும் பலவீனமாகின்றன, கீழே விழும்போது எளிதில் உடையலாம் அல்லது அன்றாட இயக்கங்களின் போது கூட எளிதில் உடையலாம். எலும்புப்புரை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன.[6] வயது முதிர்வு என்பது ஒரு திட்டவட்டமான உயிரியல் நிலை அல்ல, ஏனெனில் "வயதானவர்கள்" எனக் குறிப்பிடப்படுவது காலவரிசை வயது பண்பாடு மற்றும் வரலாற்று ரீதியாக மாறுபடுகிறது.[7] 2011 ல், ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் மாநாட்டில் குறிப்பாக முதியவர்களைப் பாதுகாக்கும் முறையை முன்வைத்தது.[8] வரையறைகள்![]() வயதாவது என்ற வரையறைகள் அதிகாரப்பூர்வ வரையறைகள், துணை குழு வரையறைகள் மற்றும் நான்கு பரிமாணங்களை பின்வருமாறு உள்ளடக்கியது. அதிகாரப்பூர்வ வரையறைகள்வயதாவது என்பது "வாழ்க்கையின் பிற்பகுதி, இளைஞர்களுக்கும் நடுத்தர வயதிற்கும் அடுத்த காலம், வழக்கமான சரிவுடன் வாழ்வது" என்பதாகும்.[9] வயது முதிர்வு என்பதை உலகளவில் வரையறுக்க முடியாது, ஏனென்றால் இது சூழலுக்கு ஏற்ப வேறுபடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் 65+ ஆண்டுகள் பொதுவாக வயது முதிர்ந்தவராக குறிப்பிடப்படலாம் என்று ஒப்புக் கொண்டுள்ளது.[10] இது வயது முதிர்விற்கான ஒரு சர்வதேச வரையறையின் முதல் முயற்சியாகும். இருப்பினும், ஆப்பிரிக்காவில் வயதான ஆய்வுக்கு, உலக சுகாதார அமைப்பு (WHO) 55 வயதை வயது முதிர்வு என்கிறது.[11] மிகவும் வளர்ந்த மேற்கு நாடுகள் 60 வயதில் 65 வயதை வயது மூத்தவர்கள் என்ற கருத்தைத் தக்கவைக்கின்றன. 60-65 வயதுடையவர்கள் பொதுவாக மூத்த சமூக வேலைத்திட்டத்திற்கு தகுதி பெறுகிறார்கள் [12] இருப்பினும், பல்வேறு நாடுகளும் சமூகங்களும் வயது முதிர்வை 40 ஆம் ஆண்டுகள் முதல் 70 ஆம் ஆண்டுகள் வரை எனக் கருதுகின்றன.[13] வளர்ந்த நாடுகளில் ஆயுட்காலம் 80 வயதிற்கு மேலாக உயர்ந்துள்ளது என்பதால் வயது முதிர்ச்சி பற்றிய வரையறைகள் மாறின.[14] அக்டோபர் 2016 ல், அறிவியல் இதழான நேச்சர் (பத்திரிகை) வெளியிட்ட ஒரு அறிக்கையில், [115] சராசரி ஆயுட்காலம் 115 முதல், அதிகபட்சம் 125 ஆண்டுகள் வரம்பு என எழுதியது.[15] இருப்பினும், இந்த இதழின் ஆசிரியர்கள் முறைகள் மற்றும் முடிவுகளை அறிவியல் சமூகம் குறைகூறியது, என்று முடித்தனர்.[16] அதிகாரபூர்வமான சூழலில் வரையறுக்கப்படும் போது, "மூத்த குடிமகன்" என்பது பெரும்பாலும் பெரியவர்களுக்கு கிடைக்கும் சில நன்மைகளுக்கு தகுதியுடையவர் யார் என்பதை தீர்மானிக்க சட்ட அல்லது கொள்கை சார்ந்த காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பராமரிப்பு மற்றும் செலவுகள்![]() மருத்துவ முன்னேற்றங்கள் பல ஆண்டுகளாக "மரணத்தை தள்ளிவைக்க" சாத்தியமாக்கியிருக்கின்றன.[17] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia