மும்மெத்தில்சிலில் அசைடு
மும்மெத்தில்சிலில் அசைடு (Trimethylsilyl azide) என்பது (CH3)3SiN3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். கரிம வேதியியலில் இது ஒரு வினைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புவணிகரீதியாகவும் மும்மெத்தில்சிலில் அசைடு விற்பனைக்குக் கிடைக்கிறது. மும்மெத்தில்சிலில் குளோரைடுடன் சோடியம் அசைடு சேர்த்து வினைப்படுத்துவதால் இதைத் தயாரிக்கலாம்.:[1]
பயன்கள்ஐதரசோயிக் அமிலத்திற்கு மாற்றாக மும்மெத்தில்சிலில் அசைடு பலவினைகளில் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதத்தில் நீராற்பகுத்தலுக்கு உட்பட்டு ஐதரசோயிக் அமிலமாக மாறிவிடுகிறது என்பதால் மும்மெத்தில்சிலில் அசைடை ஈரம்படாமல் சேமித்து வைக்கவேண்டும்[2]. ஆசெல்தம்வீர் மொத்தத் தொகுப்புவினையில் இதைப் பயன்படுத்துகிறார்கள். பாதுகாப்புஈரப்பதம், வலிமையான ஆக்சிசனேற்றிகள், வலிமையான அமிலங்கள் ஆகியனவற்றுடன் மும்மெத்தில்சிலில் அசைடு ஒவ்வாமைத் தன்மையுடன் காணப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia