மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய்
மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய் (Glioblastoma) என்பது மூளையில் தொடங்கும் ஒருவகை கடுமையான புற்றுநோயாகும்.[6]. கிளியாபிளாசுடோமா, மூளைநரம்பு மூலச்செல்புற்று நோய் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோயின் தொடக்க அறிகுறிகள் குறிப்பிட்டுக் கூற இயலாதவையாக உள்ளன[1]. தலைவலி, ஆளுமை மாறுபாடுகள், குமட்டல் போன்ற அறிகுறிகள் பக்கவாத நோய்க்கு தோன்றும் அறிகுறிகள் போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அவை அதிவிரைவாக மோசமான நிலைக்கு அழைத்துச் செல்வதோடு சுயநினைவு இழக்கும் அபாயமும் ஏற்படும்[2]. மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்கள் தெளிவாக அறியப்படவில்லை[2]. நரம்புத்தொகுதியில் தசைநார் கட்டிகள், லி ஃபிருமேனி நோய்க்குறி கடந்தகால கதிர்வீச்சு சிகிச்சை போன்ற மரபணு கோளாறுகள் போன்றவை அசாதாரணமான காரணங்களாக கருதப்படுகின்றன [2][3]. கிளியோபிளாசுடோமாக்கள் 15% மூளைக் கட்டிகளைக் குறிக்கின்றன[1]. அவை சாதாரண மூளைச் செல்களிலிருந்து தொடங்கலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் கீழ்நிலை ஆசுட்ரோசைட்டோமா எனப்படும் மெதுவாக வளரும் மூளையுறைக்கட்டிகளில் இருந்தும் உருவாகலாம்[7]. கணித்த அலகீடு வரைவி, காந்த அதிர்வு அலை வரைவு, மற்றும் திசுப் பரிசோதனை ஆகியவற்றின் இணைப்பு சோதனைகளால் நோயறிதல் பொதுவாக செய்யப்படுகிறது. நோய் உருவாகாமல் தடுக்கும் முறைகள் தெளிவாக ஏதுமில்லை[3]. பொதுவாக அறுவை சிகிச்சையும் அதைத் தொடர்ந்து கீமோதெரபி எனப்படும் வேதிச்சிகிச்சையும் கதிர்வீச்சு சிகிச்சையும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது[3]. வேதிச்சிகிச்சையின் ஒரு பகுதியாக டெமோசோலோமைடு என்ற மருந்து பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது[8] [4]. வீக்கத்தையும் தோன்றும் நோய் அறிகுறிகளைக் குறைக்கவும் அதிக அளவு சிடீராய்டு எனப்படும் ஊக்க மருந்துகள் பயன்படுத்தப்படலாம்[1]. அனைத்தையும் அகற்ற முயற்சிப்பது அல்லது பெரும்பாலான புற்றுநோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்வது போல சிகிச்சை அளிப்பது சிறந்ததா என்பதும் உறுதியாக அறியமுடியவில்லை[9]. அதிகபட்ச சிகிச்சை கொடுக்கப்பட்டாலும் மூளைநரம்புப் புற்றுநோய் பொதுவாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அல்லது மீண்டும் மீண்டும் தோன்றுகிறது[3]. நோயறிதலைத் தொடர்ந்து உயிர்பிழைத்திருப்பததற்கான பொதுவான கால வரம்பு 12 முதல் 15 மாதங்கள் மட்டுமேயாகும். 3 முதல் 7 சதவீத்த்திற்கும் குறைவான மக்கள் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் உயிர்வாழ்கின்றனர்[2][5]. சிகிச்சை ஏதுமின்றி உயிர்வாழ்வது என்பது பொதுவாக மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம்[10]. மூளைக்குள் தொடங்கும் இப்புற்றுநோய் இரண்டாவது பொதுப் புற்றுநோயாகும். இவ்வரிசையில் முதலிடம் பிடிப்பது மெனிங்கியோமா எனப்படும் மூளையுறைக்கட்டியாகும். ஓர் ஆண்டுக்கு 100,000 பேரில் மூன்று பேர் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலும் 64 வயதுக்கு அருகிலிருந்து இந்நோய் தொடங்குகிறது. பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக ஏற்படுகிறது. இந்நோய்க்கான சிகிச்சைக்கு நோயெதிர்ப்பியச் சிகிச்சை ஆய்வு செய்யப்படுகிறது[11]. அறிகுறிகள்வலிப்புத்தாக்கங்கள், தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, நினைவாற்றல் இழப்பு, ஆளுமை மாற்றங்கள், மனநிலை அல்லது கவனச்செறிவு மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் ஆகியவை மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய் வெளிப்படும் பொதுவான அறிகுறிகளாகும். [12]. புற்றுநோய் கட்டி தோன்றும் இட்த்தைக்காட்டிலும் அக்கட்டியின் நோயியல் பண்புகள் தோற்றுவிக்கும் அறிகுறிகள் மாறுபடுகின்றன. தோன்றும் புற்றுக்கட்டி விரைவாக அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கலாம். ஆனால் எப்போதாவது சிலசமயங்களில் ஓர் உச்ச அளவை அடையும் வரை அது அறிகுறியற்ற நிலையிலேயே காணப்படுகிறது. ஆபத்து காரணிகள்பெரும்பாலும் நோய் தோன்றுவதற்கான சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை[2]. கீழ்நிலை ஆசுட்ரோசைட்டோமா எனப்படும் மற்றொரு வகை மெதுவாக வளரும் மூளையுறைக்கட்டிகளிலிருந்து சுமார் 5% அளவுக்கு இந்நோய் உருவாகிறது[12]. மரபியல் காரணங்கள்நரம்புத்தொகுதியில் தசைநார் கட்டிகள், லி-ஃபிருமேனி நோய்க்குறி, டியூபரசு சிகளீரோசிசு அல்லது டர்கோட் நோய்க்குறி போன்ற மரபணு கோளாறுகள் இந்நோய் தோன்றுவதற்கான அசாதாரண ஆபத்து காரணிகளில் அடங்கும்[12] முந்தைய காலங்களில் நோயாளி எடுத்துக் கொண்ட கதிர்வீச்சு சிகிச்சையும் ஒரு ஆபத்துக் காரணியாகும்[3]. பொதுவாகவும் பரவலாகவும் ஆண்களிடத்தில் அதிகமாக இந்நோய் காணப்படுவதற்கு சிறப்புக் காரணங்கள் ஏதும் அறியப்படவில்லை[13]. சுற்றுச்சூழல் காரணங்கள்புகைபிடித்தல், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு அல்லது ரப்பர் உற்பத்தி தொழிலில் ஈடுபடுதல் ஆகியவை மூளைநரம்பு உயிரணுப் புற்று நோய் உருவாதலுக்கு வாய்ப்பளிக்கும் பிற முக்கிய காரணிகள் ஆகும்[12]. சிமியன் வைரசு (எசு.வி 40)[14] மனித எர்ப்பெசு வைரசு-6[15] [16] (HHV-6) மற்றும் சைட்டோமெகலோவைரசு ஆகிய தீங்குயிரிகளுடன் இது தொடர்புடையது ஆகும் [17]. தடுப்புமூளைநரம்பு உயிரணுப் புற்றுநோயைத் தடுக்க அறியப்பட்ட வழி முறைகள் எதுவும் இல்லை. [3] சிகிச்சைபல சிக்கலான காரணங்களால் மூளைநரம்பு உயிரணுப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம்[18]:
முதன்மை மூளைக் கட்டிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையானது பராமரிப்பு மற்றும் உயிர்வாழ்வை மேம்படுத்துவதற்கான சிகிச்சைகளை உள்ளடக்கியதாக உள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia