மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்
மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (Economic Community of West African States, சுருக்கமாக எக்கோவாஸ் (ECOWAS) என்பது பதினைந்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு ஆகும். லேகோஸ் உடன்படிக்கையின் படி இந்த அமைப்பு 1975, மே 28 ஆம் நாள் மேற்காப்பிரிக்கப் பிராந்தியத்தில் பொருளாதார ஒருமைப்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கென அமைக்கப்பட்டது. பிராந்தியத்தில் அமைதியைப் பேணும் படையாகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது[4]. ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம் ஆகிய மூன்று அதிகாரபூர்வ மொழிகளில் செயல்படுகிறது. சில நாடுகள் இந்த அமைப்பில் இணைந்தும் விலகியும் உள்ளன. 1976 இல் கேப் வேர்ட் எக்கோவாசில் இணைந்தது, 2000 திசம்பரில் மூரித்தானியா விலகியது,[5][6]. தற்போதைய உறுப்பு நாடுகள்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia