மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014
எபோலா தீநுண்ம கொள்ளைநோய் சில மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வருகின்றது. துவக்கத்தில் மார்ச்சு 2014இல் இந்தக் கொள்ளைநோய் கினியில் துவங்கியது.[2] தொடர்ந்து, இத்தீநுண்மம் லைபீரியா, சியேரா லியோனி, நைஜீரியா நாடுகளுக்குப் பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் உயிரிழப்புக்களைக் கொண்டு இந்த திடீர்ப்பரவல் மனித வரலாற்றுக்காலத்திலேயே மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.[3] உலக சுகாதார அமைப்பு (WHO) as of 4 ஆகத்து 2014[update] அறிக்கைகளின்படி மொத்தம் 1711 ஐயப்படக்கூடிய பாதிப்புகளும் 932 இறப்புகளும் நேர்ந்துள்ளன; இவற்றில் 1070 பாதிப்புகளும் 603 இறப்புகளும் மருத்துவ ஆய்வகங்களால் எபோலாவினால் ஏற்பட்டவையாக உறுதி செய்யப்பட்டவை.[4] மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், ஐக்கிய அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள், ஐரோப்பிய ஆணையம் போன்ற அமைப்புகள் இந்த நோய்ப்பரவலை எதிர்கொள்ள நிதி வழங்கியும் மருத்துவப் பணியாளர்களை அனுப்பியும் உதவி புரிகின்றன. எல்லைகளற்ற மருத்துவர்கள், செஞ்சிலுவை இயக்கம்,[5] மற்றும் சாமரிடன்சு பர்சு போன்ற தொண்டு நிறுவனங்களும் இப்பகுதிகளில் உதவி புரிந்து வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா தீநுண்மத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக வங்கி ரூ.1,200 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது.[6]இந்நோய் தொற்றினைத் தவிர்க்க ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் நோய்வாய்ப்புள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.[7]இப் பரவலின் காரணமாக மேற்கு ஆப்ரிக்காவில் எதிர்வரும் மாதங்களில் உணவு தானிய அறுவடை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் எனவும் இதனால் உணவுப் பண்டங்களின் விலை அதிகளவு உயரும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு செப்டம்பர் 2014இல் எச்சரித்தது .[8] நோய்ப் பரவலின் காலக்கோடுகீழே தரப்பட்டுள்ள காலக்கோட்டில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தரவுகளும்[9] உலக சுகாதார அமைப்பின் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.[1] எபோலாவினால் ஏற்பட்டவை என உறுதி செய்யப்படாத ஐயுறும் பாதிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கு தரப்பட்டவைத் தவிர, ஆகத்து 1 அன்று மொராக்கோவில் லைபீரியக் குடிமகன் ஒருவர் இறந்துள்ளார்;[10] ஆகத்து 5இல் எசுப்பானிய பாதிரி ஒருவர் இறந்துள்ளார்.[11] ![]()
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia