மேற்கு வங்காள அரசுப் பள்ளிச் சேவை தேர்வில் ஊழல் 2022மேற்கு வங்காள அரசுப் பள்ளிச் சேவை ஆணையத் தேர்வில் ஊழல் (West Bengal School Service Recruitment Scam), இந்தியாவின் மேற்கு வங்காள மாநில அரசின் அரசுப் பள்ளிச் சேவை ஆணையம், 2022ம் ஆண்டிலிருந்து செய்த பள்ளிப் பணியார்கள் தேர்வில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேட்டைக் குறிக்கும்.[1] இந்த ஊழல் முறைகேடு வழக்கை நடுவண் புலனாய்வுச் செயலகம் மற்றும் அமலாக்க இயக்குனரகம் விசாரிக்கிறது.[2] இவ்வழக்கில் தொடர்புடைய அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கடசியின் பொதுச் செயலாரும், மேற்கு வங்க அரசின் கல்வி அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜி 23 சூலை 2022 அன்று கைது செய்யப்பட்டார்.[3] 18 சூலை 2023 அன்று முன்னாள் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது விசாரணை நடத்த நடுவண் புலனாய்வுச் செயலகத்திற்கு மேற்கு வங்காள ஆளுநர் அனுமதி வழங்கினார்.[4] பின்னணிநவம்பர் 2021 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றம், சிபிஐயை மேற்கு வங்க அரசின் பள்ளிச் சேவை பணியாள்ர்கள் தேர்வு முறைகேட்டை விசாரிக்க உத்தரவிட்டது.[5] மே 2022ல் முன்னாள் சிபிஐ அதிகாரியும், மம்தா பானர்ஜி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த உபேந்திரநாத் பிஸ்வாஸ்[6] தனது முகநூல் பக்கத்தில் அரசுப் பள்ளிச் சேவை தேர்வாணையத் தேர்வில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைச் சுட்டிக் காட்டினார்.[7] 23 சூலை 2022 அன்று அமலாக்க இயக்குனரகம் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டஜியை கைது செய்து விசாரணை நடத்தியது.[8] பார்த்தா சாட்டர்ஜியின் தனி உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டை அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் 23 சூலை 2022 அன்று சோதனை நடத்தி ரூபாய் 21 கோடி பணம் மற்றும் 120 இலட்சம் மதிப்பிள்ள தங்க நகைகளைக் கைப்பற்றியதுடன், அர்பிதா முகர்ஜியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.[9][10] இருப்பினும் தான் தங்கியிருந்த வீட்டை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பயன்படுத்தியதாக தெரிவித்தார்.[11] அடுத்த நாள் அர்பிதா முகர்ஜியின் மற்றொரு வீட்டை அமலாக்க இயக்க அதிகாரிகள் சோதனையிட்டதில் ரூபாய் 27.90 கோடி பணத்தாள்கள் மற்றும் 6 கிலோ தங்கத்தைக் கைப்பற்றினர்.[12] 10 ஆகஸ்டு 2022 அன்று மேற்கு வங்க பள்ளிப் பணியாளர்கள் தேவாணையததின் சிறப்பு அலோசகர் சாந்தி பிரசாத் சின்கா மற்றும் மேற்கு வங்க அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அசோக் சாகாவை சிபிஐ விசாரணை செய்து கைது செய்தனர்.[13] 15 செப்டம்பர் 2022 அன்று சிபிஐ மேற்கு வங்காள பள்ளிக் கல்வி வாரியத்தின் தலைவர் கல்யாண்மாய் கங்கோபாத்தியாவை விசாரித்து கைது செய்தது.[14] 19 செப்டம்பர் 2022 அன்று மேற்கு வங்க மாநில பணியாளர் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவரும், வடக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான சுபிரேஷ் பட்டாச்சாரியவை சிபிஐ கைது செய்தது.[15] 11 அக்டோபர் 2022 அன்று அமலாக்க இயக்குனரகம் திரிணாமூல் காங்கிஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு வங்க பள்ளிச் சேவைகளுக்கான ஆணையத்தின் தற்போதைய தலைவருமான மாணிக் பட்டாச்சாரியாவை கைது செய்தது.[16][17] 17 ஏப்ரல் 2023 அன்று பல கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் சிபிஐ, திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக ஜிபன் கிருஷ்ணா சாகா கைது செய்யப்பட்டார்.[18][19] 28 மே 2023 அன்று முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான அபிசேக் பானர்ஜியை அமலாக்க இயக்குனரகம் விசாரணை செய்தது.[20][21] எதிர் விளைவுகள்28 சூலை 2022 அன்று ஊழல் முறைகேடு வழக்கில் தொடர்புடைய அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், கல்வி அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.[22][23] உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புஇவ்வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 2025 அன்று அளித்த தீர்ப்பில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 25,000 ஆசிரியர்களையும் பணியிலிருந்து நீக்கி, ஆசிரியர் தேர்வு வாரியம் புதிதாக போட்டித் தேர்வு நடத்தி ஆசிரியர்களை பணியமர்த்த தீர்ப்பு வழங்கியது.[24][25] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia