மைக்கோபிளாஸ்மா
மைக்கோபிளாஸ்மா (Mycoplasma) என்பது பாக்டீரியாவின் ஒரு பிரிவு ஆகும். இவற்றின் செல்சவ்வுகளைச் சுற்றி ஒரு செல் சுவர் கிடையாது.[1] இதனால், இவை பெனிசிலின் அல்லது பிற பீட்டா-லாக்டாம் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற பல பொதுவான எதிருயிரிகளால் வளா்ச்சியை இழக்கின்றன. மைக்கோபிளாஸ்மாக்கள் ஒட்டுண்ணி அல்லது சாறுண்ணிகளாக வாழ்கின்றன. இவற்றில் பல இனங்கள் மனிதர்களில் நோய்களை உண்டாக்குகின்றன. உதாரணமாக, எம்.நியூமோனியா மற்றும் எம்.பின்மிலிமியம் வகைகள், நுரையீரல் அழற்சி (நிமோனியா) மற்றும் பிற சுவாசக் கோளாறுகளை உண்டாக்குகின்றன. இவை இடுப்பு அழற்சி நோய்களை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. மைக்கோபிளாஸ்மா இனங்கள் இதுவரைக் கண்டறியப்பட்டவற்றுள் மிகச்சிறிய உயிரிகளாகும்[2] இவற்றால் உயிர்வளி இல்லாமல் வாழ முடியும். மேலும், மைக்கோபிளாஸ்மாக்கள் பல்வேறு வடிவங்களில் வாழக் கூடியவை. உதாரணம்: மைக்கோபிளாஸ்மா ஜெனீலிடியம் (குடுவை வடிவம்) (சுமார் 300 x 600 நானோமீட்டர்) மைக்கோபிளாஸ்மா நியுமோனியா (நீளம் 100 x 1000 நானோமீட்டர்). நூற்றுக்கணக்கான மைக்கோபிளாஸ்மா இனங்கள் விலங்குககளைப் பாதிக்கின்றன.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia