மைதிலி சிவராமன்
மைதிலி சிவராமன் (Mythili Sivaraman, 14 திசம்பர் 1939 – 30 மே 2021) ஒரு இந்திய அரசியல்வாதியும் பெண் உரிமைச் செயல்பாட்டாளரும் ஆவார். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)யின் பெண்கள் பிரிவான அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.[1] வாழ்க்கைக் குறிப்புமைதிலி சிவராமன் 1966-68 காலகட்டத்தில் ஐநா சபைக்கான இந்திய நிரந்தர தூதுக்குழுவில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். மூன்றாம் உலக நாடுகளில் தன்னாட்சி அதிகாரம் இல்லாத பகுதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் காலனிமயமழிதல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். ஐநா சபைப் பணிக்காலம் முடிந்த பின் இந்தியா திரும்பி இடதுசாரி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். மேலும், தொழிற்சங்கவாதியாகவும் பெண் உரிமைச் செயல்பாட்டாளராகவும் நன்கறியப்பட்டார்.[2] கீழ்வெண்மணிப் படுகொலைகளை உலகின் கவனத்துக்கு கொண்டு வந்ததில் மைதிலியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு குறித்து அவர் எழுதிய பத்திகளும் கட்டுரைகளும் “ஹாண்டட் பை ஃபையர்” (Haunted by Fire) என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளன.[3] வாச்சாத்தி வன்முறை நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்களை நேர்கண்டு அதனைப் பற்றிய உண்மைகளை ஆவணப்படுத்தியுள்ளார். நிகழ்வு குறித்து இந்திய பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தோன்றி வாதிட்டார்.[4] இறுதி காலத்தில் ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்[5]. அவரது மகள் கல்பனா கருணாகரன் சென்னை ஐஐடியில் துணைப் பேராசிரியராக உள்ளார்[6][7]. எழுதியுள்ள நூல்கள்
மறைவுகொரோனா தொற்றால், சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மே 30, 2021 அன்று உயிரிழந்தார்.[10] [11] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia