யுயேண்டே தானுந்து நிறுவனம்
யுயேண்டே மோடார்சு கம்பனி (Hyundai Motors Company, கொரிய மொழி: 현대}}, Hyŏndae, ,[1] ) கொரியாவின் ஓர் தானுந்து தயாரிப்பாளராகும். இதன் துணை நிறுவனமான கியா மோட்டார்சுடன் இணைந்த யுயேண்டே கியா ஆட்டோமோடிவ் குழுமம் 2009ஆம் ஆண்டில் உலகின் நான்காவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராக விளங்குகிறது.[2] மேலும் அவ்வாண்டு நிலவரப்படி உலகில் மிக விரைவாக வளர்ந்து வரும் தானுந்து தயாரிப்பாளருமாகும்.[3][4] 2008இல் கியா இல்லாமலே உலகில் எட்டாவது நிலையில் இருந்தது.[5] தென் கொரியாவின் சியோலைத் தலைமையகமாகக் கொண்டு உல்சானில் ஆண்டுக்கு 1.6 மில்லியன் அலகுகள் தயாரிக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தானுந்து தயாரிப்பு தொழிற்சாலையை இயக்குகிறது.[6] இந்த நிறுவனத்தில் உலகெங்கும் ஏறதாழ 75,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். யுயேண்டே வண்டிகள் 193 நாடுகளில் 6000 முகவர்கள் மற்றும் காட்சிக்கூடங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. 2010ஆம் ஆண்டில் யுயேண்டே உலகளவில் 1.7 மில்லியன் தானுந்திகளை விற்றுள்ளது. இந்தியாவில்இந்தியாவில் இதன் துணை நிறுவனமாக யுயேண்டே மோடார் இந்தியா லிமிடெட் இயங்குகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் மாருதி சுசூக்கியை அடுத்து இரண்டாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராக விளங்குகிறது.[7] சிறு மகிழுந்து தயாரிப்பில் இந்தியாவை உலகளவில் தயாரிப்பு மையமாக ஆக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பலவகை மகிழுந்துகளை விற்பனை செய்கிறது: பரவலான வகைகளில் இயான், சாண்ட்ரோ சிங், யுயேண்டே ஐ10, ஐ20 முதலியன விளங்குகின்றன. பிற வகைகளாவன: கெட்சு பிரைம், ஆக்சென்ட், டெர்ராகேன், எலாந்தரா (இனி இல்லை), வெர்னா, டக்சன், சான்டா ்பே, சோனாடா டிரான்சுபார்ம் ஆகும். யுயேண்டை இரு தயாரிப்பு தொழிற்சாலைகளை தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூரில் இயக்குகிறது. இவ்விரண்டுத் தொழிற்சாலைகளின் இணைந்த திறனளவு ஆண்டுக்கு 600,000 அலகுகளாகும். 2007ஆம் ஆண்டு ஆந்திராவின் ஐதராபாத்தில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட 450 பொறியாளர்களுடன் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கி உள்ளது. யுயேண்டே மோட்டார்சு இந்தியா இஞ்சினீயரிங் (HMIE) எனப்படும் இந்த நிறுவனம் வாகன மேம்பாட்டிற்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்குவதுடன் கொரியாவிலுள்ள நாம்யங் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு கணினி உதவிடும் வடிவமைப்பு CAD மற்றும் கணினி உதவிடும் பொறியில் CAE ஆதரவும் அளிக்கிறது. விற்பனை சரிவு2015 ஆம் ஆண்டின் மார்ச்சு மாதம் முடிய 3.8 சதவீதம் கார் விற்பனை சரிந்துள்ளது. சென்ற ஆண்டில் 51,708 கார்கள் விற்பனை செய்தது ஆனால் இந்த ஆண்டு 49,740 கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது.[8] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்![]() The Wikibook Vehicle Identification Numbers (VIN codes) மேலதிக விவரங்களுள்ளன: Hyundai VIN Codes
|
Portal di Ensiklopedia Dunia