ரத்யா புஸ்தகா அருங்காட்சியகம், சுராகர்த்தா
ரத்யா புஸ்தகா அருங்காட்சியகம் (Radya Pustaka Museum), இந்தோனேஷியாவில் சுராகர்த்தா என்னுமிடத்தில் உள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். 1890 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது இந்தோனேசியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகமாகும் (மிகவும் பழமையானது ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகம்). இந்த அருங்காட்சியகம் பழைய ஜாவானீஸ் மற்றும் டச்சு மொழிகளில் பல்வேறு இலக்கியங்களைக் கொண்டுள்ளது. தமன் ஸ்ரீவேதரியின் பூங்கா வளாகத்திற்குள் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. வரலாறுஅக்டோபர் 28, 1890 ஆம் நாளன்று ஒன்பதாம் பாகுபுவோனோ ஆளுநராக இருந்த காலகட்டத்தில் நான்காம் காஞ்செங் ஆதிபதி சோஸ்ரினிராட் [1] என்பவரால் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. ஜனவரி 1, 1913 ஆம் நாளன்று இந்த அருங்காட்சியகம் அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. முன்பு ஒரு டச்சுக்காரரான ஜோகன்னஸ் புஸ்ஸலார் என்பருடைய இல்லமாக இது இருந்தது. சேகரிப்பு![]() சுராகர்த்தா க்ராடான் என்ற இடத்தைச் சேர்ந்த, 19 ஆம் நூற்றாண்டு கவிஞரான ரங்கா வார்சிடா என்பவரின் மார்பளவு அளவிலான ஒரு சிலை இந்த அருங்காட்சியகம் முன் முற்றத்தில் வைக்கப்படுகின்றது. இந்தச் சிலையானது 1953 ஆம் ஆண்டில் இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்னோவால் திறந்து வைக்கப்பட்டது. பல 17 ஆம் நூற்றாண்டு மற்றும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் பீரங்கிகள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் க்ராடான் பகுதியைச் சேர்ந்த சிறிய அளவிலான பீரங்கிகளும் இங்கு காட்சியில் உள்ளன. சுரகார்த்தா பகுதியைச் சுற்றி அமைந்துள்ள இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்து-பௌத்த சிற்பங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், வயாங் பொம்மலாட்ட பொம்மைகள், வயாங் பெபர், பீங்கான் கலைப்பொருள்கள், கேமலன் எனப்படுகின்ற இசைக்கருவி மற்றும் ஜாவானீய கிரிஸ் கத்தி போன்ற பல பொருள்கள் இங்கு காட்சியில் உள்ளன. சிறப்புகள்இந்தோனேசியாவின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றான ரத்யா புஸ்தகா அருங்காட்சியகம், சுரகார்த்தாவின் கலாச்சாரப் பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகம் ஜாவானீய கலை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான வரலாற்று மற்றும் கலாச்சார சேகரிப்புகள் இங்கு இருந்தாலும் அவற்றுள் முக்கியமானவை கசுனனன் அரண்மனையிலிருந்து பெறப்பட்டு இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்களாக அமையும். இந்த அருங்காட்சியகம் பண்டைய ஜாவானிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இலக்கியப் படைப்புகள், வரைபடங்கள், பண்டைய அரச குடும்ப மரங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க கலாச்சார பொருள்களையும் கொண்டு அமைந்துள்ளது.[2] கிரிஸ் சார்ட் எனப்படும் சார்ட்டில் 33 புள்ளிகளைக் கொண்ட ஒரு கத்தி உள்ளது. (துரதிருஷ்டவசமாக அவை பற்றிய குறிப்பு ஆங்கிலத்தில் காணப்படவில்லை. அவை பண்டைய சூடானிய மொழியில் உள்ளன.) கிரிஸ் அருங்காட்சியகத்தப் போலன்றி இங்கு சில கலைப் பொருள்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அனைத்து கலைப்பொருள்களுக்கும் தரப்படாவிட்டாலும் சில பொருள்களுக்கு அவ்வாறு தரப்பட்டுள்ளன.[3] வருமானம்ரத்யா புஸ்தகா அருங்காட்சியகம் ஜலான் ஸ்லேமெட் ரியாடி 275, சூரகார்த்தா, மத்திய ஜாவா, இந்தோனேசியா 57141 என்ற முகவரியில் அமைந்துள்ளது. நிரந்தர தொகுப்புகளான கலை, ஆசிய கலாச்சாரங்கள், மட்பாண்டங்கள், வரைபடங்கள், சிற்பம் ஆகியவை சார்ந்த கலைப்பொருள்களை விற்பதன்மூலம் இந்த அருங்காட்சியகத்திற்கு வருமானம் வருகிறது.[2] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia