லிடியா பெலோசியோரோவா
லிடியா ஒலெக்சிவ்னா பெலோசியோரோவா (Lidiya Oleksiivna Belozyorova உக்ரைனியன்: Лідія Олексіївна Бєлозьорова; 31 மார்ச் 1945-15 பிப்ரவரி 2022) என்பவர் உக்ரேனிய நாடக, திரைப்பட நடிகை ஆவார். இவர் மைக்கோலா குலிஷ் நடாகக் குழுவில் ஒரு கலைஞராக பணியாற்றத் தொடங்கினார் மேலும் 1968 மற்றும் 1969 க்கு இடையில் ரிவ்னே மியூசிகல்-டிராமாடிக் நாடக் குழுவிலும், 1969 முதல் 1972 வரை மரியா ஜான்கோவெட்ஸ்கா நாடகக் குழுவிலும், இறுதியாக மியூசிகல்-டிராமாடிக் மைகோலா சடோவ்ஸ்கி நாடக் குழுவில் தனது தொழில்முறை பணி வாழ்க்கையை கழித்தார். பெலோசியோரோவா மியூசிகல்-டிராமாடிக் மைகோலா சடோவ்ஸ்கி நாடக் குழுவில் 100 க்கும் மேற்பட்ட நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் நிகழ்த்தினார். இவர் உக்ரைனின் மக்கள் கலைஞர் என்ற விருதையும், உக்ரைனின் மெரிட்டட் ஆர்ட்டிஸ்ட் என்ற பட்டத்தையும், இளவரசி ஓல்காவின் 3 ஆம் வகுப்பு ஆணை என்றும் விருதையும் பெற்றார். வாழ்க்கைஇவர் உக்ரைன் சோவியத் சோசலிசக் குடியரசின் கெர்சன் நகரில் 1945, மார்ச், 31 அன்று பிறந்தார். இவருக்கு இவரது பெற்றோர் பெலோசியோரோவா லிடியா வகுலா என்ற பெயர் இட்டனர்.[1][2] 1963 ஆம் ஆண்டில், இவர் மைக்கோலா குலிஷ் நாடக் குழுவில் ஒரு கலைஞராக பணியாற்றத் தொடங்கினார்.[3] பெலோசியோரோவா 1968 ஆம் ஆண்டு கீவ் நேஷனல் ஐ. கே. கார்பென்கோ-கேரி நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டதாரி ஆனார்.[4][5][6] இவர் 1968 முதல் 1969 வரை ரிவ்னே மியூசிகல்-டிராமாடிக் நாடக் குழுவிலும், பின்னர் 1969 மற்றும் 1972 க்கு இடையில் மரியா ஜான்கோவெட்ஸ்கா நாடக் குழுவிலும் நடிகையாக இருந்தார்.[2][5][6] 1972 ஆம் ஆண்டில், பெலோசியோரோவா மியூசிகல்-டிராமாடிக் மைகோலா சடோவ்ஸ்கி நாடக் குழுவில் இணைந்தார்.[4][7] இந்த நாடக் குழுவில் 100 க்கும் மேற்பட்ட நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் நிகழ்த்தினார்.[8] இவர் திரைப்படங்களிலும் பாத்திரங்களைக் ஏற்கத் தொடங்கினார். 1971 ஆண்டைய திரைப்படமான வெசெலி ஜாபோக்ரிச்சி என்ற படத்தில் பராஸ்கா என்ற பாத்திரத்தில் நடித்தார், 1972 இல் போரிஸ் இவ்செங்கோ திரைப்படமான தி லாஸ்ட் லெட்டரில் கோசாக்கின் மனைவியாகவும், 1975 ஐசக் சிமருக் திரைப்படமான சிம்பிள் கேர்சில் வலேரியா என்ற பாத்திரத்தில் நடித்தார்.[1] 2005 மற்றும் 2007 இல் முஹ்தார்ஸ் ரிட்டர்ன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது தொடர்களில் பாத்திரங்களை ஏற்று நடித்தார்.[6] பெலோசியோரோவா 2022, பெப்ரவரி, 15 அன்று வின்னித்சியாவில் இறந்தார். பிப்ரவரி 17 பிற்பகல், வின்னிட்சியாவில் உள்ள மியூசிகல்-டிராமாடிக் தியேட்டர் மைகோலா சடோவ்ஸ்கியில் பெலோசியோரோவாவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது, இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விருதுகள்1993 ஆம் ஆண்டில், இவர் உக்ரைன் மக்கள் கலைஞர் என்ற விருதையும், உக்ரைனின் தகுதி வாய்ந்த கலைஞர் என்ற பட்டத்தையும் பெற்றார்.[3] பெலோசியோரோவா 2001 அல்லது 2002 ஆம் ஆண்டுகளில் "நாடகப் பணிக்காக" நிகோலாய் ஜருட்னி பரிசு பெற்றவராக அறிவிக்கபட்டார்.[1][5] 2003 ஆம் ஆண்டு, இவர் இளவரசி ஓல்காவின் 3 ஆம் வகுப்பு ஆணை என்றும் விருதைப் பெற்றார்.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia