வக்ஃபு (திருத்த) மசோதா, 2024(The Waqf (Amendment) Bill, 2024) ஆகஸ்ட் 8, 2024 இல் இந்திய மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. [1][2][3] இது 1923 இல் இயற்றப்பட்ட முசல்மான் வக்ஃபு சட்டத்தை மாற்றியமைக்கவும், 1995 வக்ஃபு சட்டத்தைத் திருத்தவும் முயல்கிறது. [4] இந்தச் சட்டம் இந்தியாவில் வக்ஃபு சொத்துக்களை ஒழுங்குபடுத்தவும், முஸ்லிம் சட்டத்தின் கீழ் புனிதமான, மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காகக் கருதப்படும் அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை அறகட்டளை நிதியாக வரையறுக்கிறது. வக்ஃபுகளை நிர்வகிக்க ஒவ்வொரு மாநிலமும் ஒரு வக்ஃபு வாரியத்தை அமைக்க வேண்டும். இந்த மசோதா இந்தச் சட்டத்தை 'ஐக்கிய வக்ஃபு மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1995' (UWMEEDA 1995) என மறுபெயரிடுகிறது.